என்னது ‘தங்கலான்‘ படத்தில் விக்ரமுக்கு வசனமே இல்லையா? கசிந்த ரகசிய தகவல்

By John A

Published:

ஒரு நடிகர் வசனமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து தேசிய விருதுவரை வென்றார் என்றால் அது சீயான் விக்ரமாகத் தான் இருக்கக் கூடும். ஏனெனில் பிதாமகன் திரைப்படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து மிரளாத சினிமா ரசிகர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு வெட்டியான் கதாபாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்தியிருப்பார். இயக்குநர் பாலாவின் பொக்கிஷ படைப்பான பிதாமகனில் விக்ரம் சித்தனாகவே வாழ்ந்திருப்பார்.

இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால் படம் முழுக்க விக்ரமுக்கு வசனமே இல்லை. ஒரே ஒரு ஒப்பாரி பாடல் மட்டும் பாடியிருப்பார். மற்றபடி நடிப்பிலேயே பேசியிருப்பார். அதேபோன்றுதான் தற்போது மீண்டும் ஒரு கிளாசிக் படமாக அமையவிருக்கும் தங்கலான் படத்திலும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை விக்ரமே தெரிவித்த நிலையில், பிதாமகன் படத்தில் எப்படி எனக்கு வசனமே இல்லையோ அதே போன்று தான் தங்கலான் படத்திலும் எனக்கு வசனங்கள் இல்லை என்று சுவாரஸ்ய அப்டேட் கொடுத்துள்ளார்.  ஏற்கனவே தங்கலான் டீசர் வெளியாகி அதில் விக்ரமின் உழைப்பைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் நிலையில் தற்போது வெளியான இந்த அப்டேட்டும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

வெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்

வசனமே இல்லாமல் விக்ரமின் நடிப்பை பிதாமகனில் பார்த்தது போன்ற தங்கலான் படத்திலும் காண ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். பா.ரஞ்சித்துக்கும் தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து வேறொரு கதைக்களத்தில் இயக்கியிருப்பதால் சினிமா விமர்சகர்கள் படத்தைப் பற்றி நாளுக்குநாள் அப்படி இப்படி என்று கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர். இரத்தமும், ஆயுதமும், காடும் மலையுமாக கதைக் களம் இருப்பதால் இப்படத்தின் போர்க்காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

வருகிற 2024 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகும் தங்கலான் திரைப்படம் விடுதலை குறித்த கதைக்களமாக இருக்கும் என்று டீசரிலேயே தெரிகிறது. விக்ரமின் லுக்கும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிதாமகன், ஐ,  இராவணன், சேது போன்ற படங்களை ஒப்பிடும்போது இந்தப்படத்திற்காக என்னுடைய உழைப்பு மிக அபாராமானது என்றும் விக்ரம் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.