மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது வழக்கமாக அரசியல் இதிலும் அரசியல்தான் இவர் பேசுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இதற்கு முந்தைய ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் அரசியல்தான் இவர் பேசி இருக்கிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது மீண்டும் அரசியலை பேசியுள்ளார் விஜய்.
அவர் பேசியதாவது, நாட்டில் மக்களுக்குத் தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும் என்றும், சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
எது நடந்தாலும் நம் கடமையைச் செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும் என கூறிய நடிகர் விஜய், உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.