மிரள வைக்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா குறுகிய காலத்திலேயே இவ்வளவு கோடிகளா?

By John A

Published:

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தனது துபாய் வேலையை உதறிவிட்டு பின் கூத்துப்பட்டறையில் கணக்காளராகச் சேர்ந்து படிப்படியாக நடிப்புக் கற்று இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்தான் விஜய் சேதுபதி. எந்த கேரக்டர் கொடுத்தாலும் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதை வெல்பவர். ஹீரோ, வில்லன், துணைக் கதாபாத்திரம், குணச்சித்திரவேடம் போன்ற பல்வேறு பரிணாமங்களை திரையில் காட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியை தென்மேற்குப் பருவக் காற்று படம் மூலம் ஹீரோவாக்கி முதல் படத்திலேயே முத்திரை பதிக்க வைத்தார் இயக்குநர் சீனு ராமசாமி. அதன்பின் பீட்சா, சூதுகவ்வும் போன்ற படங்கள் வரிசையாக ஹிட் அடிக்க வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரானார் விஜய் சேதுபதி. பின்னர் விக்ரம் வேதாவில் இவர் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க படம் ஹிட் ஆகி முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

தற்போது இவரின் சொத்து மதிப்பு வெளியாகி ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. அதன்படி விஜய் சேதுபதி தான் நடிக்கும் ஒரு படத்திற்கு 15 முதல் 21 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் நம்ம ஊரு ஹீரோ, மாஸ்டர் செப், நவரசா, பெண் போன்ற ரியாலிட்டி டிவி ஷோக்கள் மூலம் சில கோடிகளை சம்பளமாகப் பெற்றுள்ளார்.

குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.

இதைத் தவிர அனில் சேமியா, காசா கிராண்ட், தமிழ் தலைவாஸ், போன்ற நிறுவனங்களில் விளம்பர மாடலாக நடித்து அதிலும் சில கோடிகளை சம்பாதித்துள்ளார். சென்னையில் ரூ.50கோடி மதிப்பில் சொகுசு பங்களா வைத்திருக்கும் விஜய் சேதுபதி மற்ற மாவட்டங்களிலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார்.

விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆரஞ்சுமிட்டாய், கடைசி விவசாயி, ஜூங்கா, லாபம் போன்ற படங்களையும் எடுத்துள்ளார். மேலும் 3 கோடி மதிப்பில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மினி ஹூப்பர், டொயோட்டா பார்டியூனர், இன்னோவா ஆகிய கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.

மேலும் 8 மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோவர்களையும், எக்ஸ் தளத்தில் 3 மில்லியன் பாலோவர்களையும் பெற்று சோஷியல் மீடியா மூலம் சில லட்சங்களையும் ஈட்டி வருகிறார் இந்த மக்கள் செல்வன். மொத்தத்தில் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக மாறி வசூலிலும் செல்வனாக விளங்கி வருகிறார்.