நடிகர் விஜய்- சங்கீதா விவாகரத்து…? ஒரு போட்டோ மூலம் சங்கீதா செய்த செயல்…

By Meena

Published:

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரபலங்களில் நடிகர் விஜயும் ஒருவர். இவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் SA சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார் விஜய். தனது 18 வது வயதில் நாயகனாக அறிமுகமானார்.

90 களின் நடுப்பகுதியில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த விஜய், 2000 களின் முற்பகுதியில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஆனார். பின்னர் சமூக கருத்துள்ள பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தளபதி ஆனார் விஜய்.

விஜய் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அவர் எந்த படத்தில் நடித்தாலும் வெற்றி தான் என்றானது. படத்தை தவிர பொது நிகழ்ச்சியில் அவரின் எளிமையான குணத்தை கண்ட மக்கள் அவரை விரும்பினர். தற்போது அரசியலில் இறங்கியிருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

பிரபல பிண்ணனி பாடகியான சுசித்ரா நடிகர் நடிகைகளின் ரகசியங்களை சொல்வதாக கூறிய விஷயங்கள் மூலம் சர்ச்சைக்குள்ளானவர். சமீபத்தில் த்ரிஷா விஜயுடன் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த சுசித்ரா சமூக வலைத்தளத்தில், த்ரிஷா விஜய் அரசியலில் இறங்கிவிட்டதால், எம். ஜி. ஆர் அவர்களுக்கு ஜெயலலிதா போல விஜய்க்கு பக்கத்தில் த்ரிஷா ஆக பார்க்கிறார். விஜய் தனது மனைவி, குழந்தைகளுடன் அல்லாமல் பிரிந்து வாழ்கிறார். இந்த சந்தர்ப்பத்தை த்ரிஷா பயன்படுத்தி கொள்ள பார்க்கிறார் என்று கூறி சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தார் சுசித்ரா.

அதற்கு சாதகமாக எல்லா நிகழ்ச்சிக்கும் விஜயுடன் வரும் சங்கீதா, கடந்த சில விஜய் அவர்களின் நிகழ்ச்சியில் சங்கீதா கலந்து கொள்ளாதது அனைவருக்கும் சந்தேகத்தை வரவழைத்தது. ஒருவேளை விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து விட்டார்களோ என்ற வதந்தி பரவி வந்தது. தற்போது ட்விட்டரில் ‘எனக்கு எப்போதும் ஸ்பெஷலானவர்’ என்று எழுதி விஜயுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஜயின் மனைவி சங்கீதா.