நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் படங்களின் சம்பளத் தொகையில் 25% சதவீதம் குறைத்துள்ளார் என்று கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 4 ஆம் தேதியில் இருந்து மே 18 வரையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால், சினிமாப் படப்பிடிப்புகள் உட்பட மிக முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாத் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட தமிழ் நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் படங்களின் சம்பளத் தொகையில் 25% சதவீதம் குறைத்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பினை தயாரிப்பாளர்களுக்கு கால் செய்து கூறியதோடு, அவர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். இவர் தற்போது தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி போன்ற படங்களில் நடித்துவருகிறார். விஜய் ஆண்டனியின் இந்த முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தினைச் சார்ந்த பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.