சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது நடிப்பால் உச்சத்திற்கு கொண்டு சென்றவர். அவரது முக பாவனைகளுக்கும் நடிப்பிற்கும் இணையாக இன்றளவும் எந்த நடிகரும் இணையில்லை என்று சொல்லலாம்.
சிவாஜி கணேசன் அவர்களின் முக தோற்றத்திற்கு எந்த வேடம் அல்லது கதாபாத்திரம் ஆனாலும் கச்சிதமாக பொருந்தும். அவரின் நடிப்பை பற்றி சொல்லவே தேவை இல்லை, நடிகர் திலகம் என்ற பெயரே அவரைப் பற்றி சொல்லும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்தவர். 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக மட்டும் நடித்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தான். 1960 ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற ஆசிய சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிறந்த நடிகர்’ என்ற விருதை வென்ற ஒரே இந்திய நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார்.
அதே காலத்தில் மிகச் சிறந்த நடிகர்களாக திகழ்ந்தவர்கள் TS பாலையா மற்றும் MR ராதா ஆகியோர் ஆகும். TS பாலையா அவர்கள் வில்லன், குணச்சித்திர மற்றும் நகைச்சவை நடிகராக பிரபலமானவர். அடுத்ததாக சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தனக்கே உரிய பாணியில் நக்கலுடன் ரசிக்கும்படி கூறுபவர் நடிகவேள் MR ராதா அவர்கள். கூர்மையான நடிப்புத் திறமையால் பிரபலமானவர் MR ராதா.
எல்லா நடிகர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ரோல் மாடலாக எடுத்து நடிக்கும் போது, சிவாஜி கணேசனே வியந்து பார்த்த நடிகர்கள் என்றால் அது TS பாலையா மற்றும் MR ராதா அவர்கள் தானாம். அப்பேற்பட்ட நடிகர்கள் மற்றும் பாக்கியசாலிகள் TS பாலையா மற்றும் MR ராதா.