இயக்குநர் பாலாவின் உதவியாளராக இருந்து தொழில் கற்று அஜீத்தின் ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து கொடுத்த ட் படத்தின் மூலம் இயக்குநராக உருவெடுத்து தொடர்நது காமெடி, இன்று குணச்சித்திர நடிப்பில் அதச்தும் நடிகர் தான் சிங்கம்புலி. பாலா இயக்கிய நான் கடவுள், பிதாமகன் ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும், வசனகார்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார் சிங்கம்புலி.
காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிங்கம்புலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த மகாராஜா திரைப்படம் திரையில் அடுத்த இடத்தினைக் கொடுத்தது. தன் மகள் வயதுடைய பெண்ணை பலாத்காரம் செய்யும் காட்சியில் நடித்து அதிர வைத்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பேசப்பட்டதோ இல்லையோ சிங்கம்புலியின் நடிப்புதான் பெரிதும் கவனிக்கப்பட்டது.
திரையில் பிதாமகன் ஷுட்டிங்கின் போது சூர்யாவுடன் அதிகமாகப் பழகும் சந்தர்ப்பம் அமைந்ததால் சூர்யாவுடன் மிக நெருக்கமானார் சிங்கம்புலி. மேலும் அடுத்த ஆண்டே வெளிவந்த பேரழகன் படத்திலும் சூர்யாவுக்காக பணியாற்றியிருக்கிறார் சிங்கம் புலி. இதனைத் தொடர்ந்து இயக்குநராக முதன் முதலாக ரெட் படத்தினை இயக்கிய பிறகு அதன்பின் 2005-ல் சூர்யாவுக்காக மாயாவி படத்தினை இயக்கினார்.
சிங்கம்புலியின் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்த சூர்யா தானே சென்று அவரிடம் கால்ஷீட் கொடுத்து எனக்காக ஒரு கதை தயார் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் சூர்யா. மேலும் அந்த தருணத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து வந்ததால் ஜோதிகாவின் கால்ஷீட்டையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் சூர்யா.
தொடர்ந்து சூர்யாவை வேறோரு கோணத்திலும், ஜோதிகாவை அப்படியே நடிகையாகவும் புதிய கதையை உருவாக்கி காமெடிப் படமாக பேரழகன் படத்தினை இயக்கியிருந்தார் சிங்கம்புலி. இப்படமும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தாக நான் கடவுள் படத்தில் பாலா நடிக்கும் வாய்ப்பினை வழங்க நடிகராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார் சிங்கம்புலி.
தொடர்ந்து அடுத்தாக கன்னடப் படம் ஒன்றை இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கிய நிலையில் சிங்கம்புலியின் நெருங்கிய நண்பரான ராசு மதுரவன் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் அவருக்கான கதாபாத்திரத்தினைக் கூறி இரண்டு நாட்கள் மட்டும் நடித்துத் தரும்படி கேட்க, 2 நாட்கள் என்பது 40 நாட்களுக்கு மேல் நீள படம் முழுக்க சிங்கம்புலி யதார்த்தமான காமெடியில் அசத்தியிருப்பார்.
மாயாண்டி குடும்பத்தார் படம் பெரும் வெற்றியடைய தொடர்ந்து சிங்கம்புலிக்கு வாய்ப்புக்ள் குவிய முழுநேர நடிகராக மாறி இன்று சிறந்த குணச்சித்திர நடிகராக சைக்கோ, மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பெயரைப் பெற்றார்.