நான் மறந்த விஷயம் நடந்திருக்கு… தென்னிந்திய சினிமாவில் மட்டுமே இது சாத்தியம்… நடிகர் சோனு சூட் பகிர்வு…

சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர்…

sonu

சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மாடலாகவும் இருந்து வருகிறார் சோனு சூட். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவாகி தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பேரும் புகழும் பெற்றார் சோனு சூட். தமிழில் மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி 2, மதகஜராஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் சோனு சூட்.

என்னதான் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் சோனு சூட் நிஜத்தில் கருணை உள்ளம் கொண்டவர். கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்போது பல உதவிகளை இயலாதவர்களுக்கு செய்து வருகிறார். இந்நிலையில் சோனு சூட் தற்போது தென்னிந்திய சினிமாவை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

சோனு சூட் கூறியது என்னவென்றால், சமீபத்தில் மதகாராஜா ராஜா திரைப்படம் வெளியாகி நல்ல பெயரை பெற்றது. அந்த திரைப்படத்தில் நான் நடித்ததையே மறந்து போய்விட்டேன். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து அந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்றால் அது தென்னிந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். ஒரு சீரியஸான நபராக இருக்கும் என்னை காமெடி சீனில் நடிக்க வைத்து சுந்தர் சி அழகாக காட்டி இருக்கிறார் என்று பெருமையாக பேசியிருக்கிறார் சோனு சூட்.