சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மாடலாகவும் இருந்து வருகிறார் சோனு சூட். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவாகி தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பேரும் புகழும் பெற்றார் சோனு சூட். தமிழில் மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி 2, மதகஜராஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் சோனு சூட்.
என்னதான் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் சோனு சூட் நிஜத்தில் கருணை உள்ளம் கொண்டவர். கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்போது பல உதவிகளை இயலாதவர்களுக்கு செய்து வருகிறார். இந்நிலையில் சோனு சூட் ஒரு நேர்காணலில் எப்போதும் இளமையாக இருப்பது எப்படி என்பதை பகிர்ந்திருக்கிறார்.
சோனு சூட் கூறியது என்னவென்றால், இளமையாக இருப்பதற்கு மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எனக்கு 50 வயது தாண்டி விட்டதால் நான் வெஜிடேரியனாக மாறிவிட்டேன். தினமும் என் உடம்புக்கு எவ்வளவு கலோரி தேவையோ அந்த அளவு மட்டும் சாப்பிடுவேன். உடற்பயிற்சி தவறாமல் செய்வேன். ஒரு அவுன்ஸ் அதிகமாக சாப்பிட்டாலும் அதை உடற்பயிற்சி செய்து சரி செய்து விடுவேன். ஆரோக்கியமான உணவு, மகிழ்ச்சியான மனநிலை, நல்ல தூக்கம் இவை மூன்றும் இருந்தால் நீங்கள் எப்போதும் இளமையாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார் சோனு சூட்.