சூர்யாவுக்காக வாக்குக் கொடுத்த சிவக்குமார்.. இருந்தும் கல்லூரிப் படிப்பில் சொதப்பிய சூர்யா..

By John A

Published:

நடிகர் சூர்யா டிகிரி படிப்பினை எப்படி முடித்தார் என்ற ரகசியத்தினை கங்குவா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவக்குமார் உடைத்தார். நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிகப்பிரமாண்ட முறையில் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா.

இதன் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. கடைசியாக சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளிவந்து இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டது. அதன்பின் சூர்யா படம் எதுவும் வெளியாகவில்லை.

சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..

இந்நிலையில் கங்குவா திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மைல்கல் படமாக அமையும் என சிறுத்தை சிவாவும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் உறுதியாகக் கூறுகின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யாவின் டிகிரி அரியர்ஸ் சீக்ரெட்டை என்பதை நடிகர் சிவக்குமார் கூறியிருக்கிறார்.

சூர்யாவுக்காக சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பிற்காக கல்லூரி முதல்வரை சந்தித்தாராம் நடிகர் சிவக்குமார். அப்போது கல்லூரி முதல்வர் நடிகர்களின் மகன்கள் பி.காம் படிப்பினை முடிக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று சிவக்குமார் கேட்க, சிவாஜியின் மகன் பி.காம் முடிக்கவில்லை.. நடிகர் பாலாஜியின் மகன் பி.காம் முடிக்கவில்லை அதனால் உங்கள் மகனும் முடிக்க மாட்டான் என்று கூறியிருக்கிறார் முதல்வர். ஆனால் சிவக்குமார் கல்லூரி முதல்வரிடம் என் மகன் கண்டிப்பாக பி.காம் முடித்துவிடுவான் என்று கூறி சேர்த்து விட்டிருக்கிறார்.

ஆனால் சூர்யா இறுதி செமஸ்டரில் நான்கு அரியர்களை வைத்திருந்தார். இதனை சிவக்குமாரிடம் கூற எப்படியாவது படித்து என் மானத்தைக் காப்பாத்திடு என்று சிவக்குமார் சொல்ல, சூர்யா எப்படியோ தட்டுத் தடுமாறி படித்து டிகிரி பாஸ் செய்திருக்கிறார்.. இவ்வாறு சூர்யா அரியர் சீக்ரெட்டை கங்குவா மேடையில் உடைத்துப் பேச அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது. சூர்யாவோ அப்பா மானத்தை வாங்கி விட்டாரே என தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார்.