நடிகர் சிவக்குமாருக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அவ்வப்போது சர்ச்சைகைளில் சிக்கி மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும் விமர்சனத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார். முதலில் செல்பி.. இப்போது சால்வை. தமிழ் திரையுலகத்தின் மார்கண்டேயனாகப் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவக்குமார் ஒழுக்கத்திற்குப் பெயர் போனவர். சினிமாவில் பல காட்சிகளில் ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடித்திருந்தாலும் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர்.
மேலும் ஓவியம் வரைவது, சொற்பொழிவாற்றுவது என தனது முதுமைக் காலங்களையும் பிஸியாக வைத்திருக்கும் சிவக்குமார் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வாங்கி கட்டிக் கொள்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடன் செல்போனில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனைத் தட்டிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவரின் அந்தச் செயல் இன்றுவரை மீம்ஸ்களாகவும், ஸ்டிக்கர்களாகவும் இணையத்தைக் கலக்கி வரும் வேளையில் இன்று அதேபோல் மற்றுமொரு சம்பவத்தால் மீண்டும் வைரலாகி இருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மூத்த அரசியல் தலைவர் பழ. கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் என்ற நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிவக்குமார் பழ.கருப்பையாவின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள், போராட்டங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவர் காலில் விழுந்தார். பின்பு மீண்டும் பேச ஆரம்பித்தார்.
சீனியர் நடிகையை கட்டிபிடிக்கும் காட்சியில் பயந்த ரஜினி.. கோபமாக திட்டிய பாலச்சந்தர்
மேலும் அவர் பேசி முடித்த பிறகு ரசிகர் ஒருவர் தான் கொண்டு வந்த சால்வையை சிவக்குமாருக்கு அன்புடன் போர்த்த முயன்ற போது அதை சிவக்குமார் உதாசீனப் படுத்தி வாங்கி தூக்கி எறிந்தார். இதனால் அந்த ரசிகர் மனவேதனை அடைந்தார். சிவக்குமாரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவவே அவருக்குக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
பொது வெளிகளில் பட்டிமன்றங்களிலும், சொற்பொழிவுகளிலும், பள்ளி மாணவர்களுக்கும் ஒழுக்கத்தைப் பற்றியும், இதிகாசங்களையும் பாடம் எடுக்கும் சிவக்குமாருக்கு இந்த நாகரீகம் கூடவா தெரியாமல் போய்விட்டது என கருத்துக்கள் வலுக்க அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.