Bigg Boss வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்… ஷாக் ஆன Housemates..

Bigg Boss தமிழ் சீசன் 8 தொடங்கிய நாளிலிருந்து பரபரப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை விடவும் இந்த சீசன் 8 க்கு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஏனென்றால் கடந்த ஏழு சீசன்களையும்…

bigg boss siva amaran

Bigg Boss தமிழ் சீசன் 8 தொடங்கிய நாளிலிருந்து பரபரப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை விடவும் இந்த சீசன் 8 க்கு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஏனென்றால் கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமலஹாசன். ஆனால் இந்த சீசனில் இருந்து அவர் படங்களில் பிஸியாக இருப்பதால் தொகுத்து வழங்கவில்லை என்று கூறினார். அதற்கடுத்ததாக யார் வருவார் என்று பேச்சுக்கள் சென்றது. நயந்தாரா விஜய் சேதுபதி என்ன லிஸ்ட் போய்க்கொண்டிருந்தது.

BB

இறுதியாக விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 தொகுத்து வழங்க இருக்கிறார் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டானது. அதன்படி இந்த சீசன் தொடங்கிய முதல் எபிசோடிலேயே விஜய் சேதுபதி நன்றாக நிகழ்ச்சியை கொண்டு சென்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி விட்டார். ஆனால் இரண்டாவது வாரம் வீகென்ட் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சற்று சொதப்பி விட்டார் ஹவுஸ்மேட்ஸ் மட்டம் தட்டி அதிகமாக பேசினார்.

ஹவுஸ் மேட்சை சரியாக மரியாதை கொடுக்காமல் மட்டம் தட்டுவது போல் பேசியதால் இணையவாசிகள் இவர் மீது நெகட்டிவ் கமெண்ட் சொல்லி வருகின்றனர். இனி இந்த வாரம் இவர் எப்படி இந்த நிகழ்ச்சியை கொண்டு போவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கு இடையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

இந்த ப்ரோமோவில் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் ஆக பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் திரைப்படம் தான் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அமரன் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். உலகநாயகன் கமலஹாசன் இந்த திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

BB

இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக தற்போது சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று ஹவுஸ் மேட்ஸ்க்கு பிரோமாவை போட்டு காட்டி படத்தை பற்றி பேசி இருக்கிறார். அவரை பார்த்ததும் சர்ப்ரைஸில் ஹவுஸ்மேட் ஷாக் ஆகி இருந்தனர். ப்ரோமோ வெளியானதில் இருந்து இன்றைய எபிசோடுக்கு மக்கள் ஆவலோடு காத்திருக்கின்ர்.