சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர். இவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து சாதித்த ஒரு நடிகர். இவர் தமிழ்த்திரை உலகில் நுழைவதற்கு முன் மிமிக்ரியால் பிரபலமடைந்தார். அதுவே விஜய் டிவியில் தொகுப்பாளராகச் செய்தது.

சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஜெஜெ என்ஜினீயரிங் காலேஜ்ல படித்தவர். ஜிட்தாஸ் – ராஜிதாஸ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. சிவகார்த்திகேயன் சிறுவயதாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.
அக்கா கௌரி. ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார்.
ஆராதனா என்று ஒரு மகள் உள்ளார். 2012ல் பாண்டிராஜ் இயக்கிய மெரினா என்ற படத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து தனது மாறுபட்ட நகைச்சுவை உணர்வு கொண்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். குறிப்பாக குழந்தைகளையும், தாய்மார்களையும் அதிகளவில் ஈர்த்தார்.
சிவகங்கை மாவட்ட மக்களின் நலனைக் காக்கும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.21 லட்சம்.

மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா, வேலைக்காரன், டாக்டர், மாவீரன் என இவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் தான்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


