நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவிற்காக பல சிறப்பான திரைப்படங்களை கொடுத்து பல சாதனை உள்ளார். அது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு போதுமான உதவியை செய்தும் வந்துள்ளார். அந்த வகையில் சிவாஜி 300 கோடிக்கு மேல் நன்கொடையாக வழங்கியுள்ளார் என கூறினால் நம்மால் நம்ப முடியுமா? இது குறித்து முழு விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் சிவாஜி 1950ல் இருந்து 1967 வரை செய்த நன்கொடையின் மொத்த மதிப்பை நாம் பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சி அடையும் விதத்தில் அமைந்துள்ளது. அதை அப்பொழுது உள்ள மதிப்பை விட தற்பொழுது உள்ள மதிப்பில் கணக்கிட்டு கூறினால் 210 கோடியே 75 லட்ச ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பல நன்கொடைகள் ரசிகர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரங்களை ஏற்படுத்தாமல் ரகசியமாக செய்து முடித்துள்ளார். நடிகர் சிவாஜி கொடுத்த நன்கொடைகளின் மொத்த லிஸ்ட் இதோ..
1953 ஆம் ஆண்டு ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக கிட்டத்தட்ட 25,000 ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்கொடை வழங்க வேண்டும் என்பதற்காக என் தங்கை எனும் ஒரு நாடகத்தை நடத்தி அதில் கிடைத்த மொத்த வசூலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி உள்ளார் சிவாஜி.
அதை அடுத்து 1959 ஆம் ஆண்டு சென்னை மேயரின் ஏழை குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்திற்காக அன்றைய பிரதமர் நேருவிடம் ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கி உள்ளார். அதன் பின் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் குழந்தைகளுக்கு மருத்துவத்துக்காக கிட்டத்தட்ட ரூபாய் 2000 ரூபாய் நிதி உதவியாக கொடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து 1960 இல் மிகப்பெரிய புயல் ஏற்பட்டது. இதில் பாதிப்படைந்த மக்களுக்காக ஒரு லட்சம் உணவு பொட்டலங்களும், ஆயிரம் பவுண்ட் பால் பவுடர்களும் எண்ணூறு அரிசி மூட்டைகளையும் அன்றைய முதல்வராக இருந்த அமைச்சர் காமராஜ் இடம் நேரடியாக ஒப்படைத்துள்ளார். சிவாஜி தானமாக கொடுத்த பொருட்களின் அன்றைய மதிப்பு மட்டுமே ரூபாய் 5 லட்சத்து ஐம்பதாயிரம். அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி உடைய தலைவர் ஜீவானந்தம் விவசாய நிலனுக்காக நிதி உதவி திரட்டி வந்துள்ளார் அவருக்கு ரூபாய் 5 லட்சம் அன்பளிப்பாக சிவாஜி கொடுத்துள்ளார்.அது மட்டும் இல்லாமல் மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு படிப்பிற்காக 5 லட்ச ரூபாய் உதவியாக கொடுத்துள்ளார்.
1961 இல் சென்னைக்கு கிழக்கு பக்கம் இருக்கக்கூடிய தாம்பரத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சத்தை அன்றைய முதல்வர் நேருவிடம் வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து மதுரையில் பாத்திமா காலேஜ் ஒரு பில்டிங்கை அமைப்பதற்கு ரூபாய் 25 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை நடத்தி அதில் இருந்து கிடைத்த வசூல் தொகை 32 லட்சத்தை கல்லூரி மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக அன்றைய காங்கிரஸ் அரசிடம் மொத்தமாக ஒப்படைத்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் மும்பையில் சத்ரபதி சிவாஜியின் சிலை அமைப்பதற்காக ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடை வழங்கியுள்ளார். அதற்கு அடுத்து மதுரையில் இருக்கக்கூடிய சரஸ்வதி பள்ளி 1964 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பள்ளியை மீண்டும் மறு கட்டமைப்பு செய்வதற்காக 1லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின் 1964 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய அணை ஒன்று சேதமடைந்துள்ளது. அதை சரி செய்வதற்காக அந்த மாநிலத்து முதல்வரிடம் 13 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். அதைத்தொடர்ந்து கர்ணன் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் திலகம் சிவாஜி தஞ்சை சென்றுள்ளார். அங்கு அரண்மனையை சுற்றியுள்ள பள்ளிகளை பார்த்துச் சென்ற பொழுது பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதி இல்லாததை உணர்ந்து 10 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
1967-இல் பட்டியல் எனும் ஒரு சமூகத்து மக்களுக்காக காரைக்குடியில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை தானமாக வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் யுத்த நிதி ஒரு லட்ச ரூபாய், சென்னை தீ விபத்து, திருச்சி ஜவான் முகமது கல்லூரிக்கு ரூபாய் ஒரு லட்சத்து 38 ஆயிரம் என பல நன்கொடைகளை வழங்கி உள்ளார்.
நடிகர் சிவாஜி 1950லிருந்து 1967 வரைக்கும் கொடுத்திருக்கக் கூடிய நன்கொடையுடைய மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 21 கோடியை 75 லட்சம் ரூபாய். அடுத்து 1968 லிருந்து 1973 வரைக்கும் கொடுத்த தொகையின் மதிப்பு 33 கோடியே 28 லட்ச ரூபாய். நடிகர் திலகம் சிவாஜி தன் வாழ்நாளில் நன்கொடையாக கொடுத்த மொத்த மதிப்பு ரூபாய் 310 கோடியே 34 லட்ச ரூபாய் ஆகும்.