1975 ஆம் ஆண்டு ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, ஜெயலலிதா, ஆர். முத்துராமன், சோ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் தான் அவன் தான் மனிதன். இந்த படத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அவன் தான் மனிதன் படத்தின் பல காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது அங்கு பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழு முடிவு எடுத்திருந்தது. படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடும் தயாராக இருந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் திலகம் சிவாஜி உட்பட அனைத்து கலைஞர்களும் காட்சியில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு பரபரப்பு ஏற்பட்டது. உதவியாளர் ஒருவர் ஓடி வந்து இயக்குனரிடம் ஒரு ரகசியத்தை கூறுகிறார். அவன் தான் மனிதன் படத்தின் இயக்குனர் திரிலோக சந்தர் ரகசியத்தை கேட்டதும் அதிர்ச்சி அடைகிறார். இதை அடுத்து படக்குழுவிற்கு தகவல் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. அனைவருக்கும் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறத் துவங்கினர்.
கடல் கடந்து வந்து படமாக்கப்படும் அவன் தான் மனிதன் படத்தில் நடிகர் சிவாஜி நடித்து வருவதால் அவரின் நேரத்தை ஒரு நிமிடம் கூட வீணாக்க கூடாது என்பது அனைவரின் எண்ணமாக இருந்தது. அந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் செய்வது அறியாது கவலை பற்றிக் கொள்கிறது. இந்த தகவலை எப்படி நடிகர் திலகம் சிவாஜி இடம் சொல்வது, எப்படி அதை சமாளிப்பது என தெரியாமல் படக்குழு தயக்கத்தில் இருந்தது. ஒரு வழியாக நடிகர் திலகத்திடம் இந்த தகவலை முறையாக தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் அனைத்து பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில் மீதம் இருந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே அன்று படமாக வேண்டிய நிலையில் இருந்தது.
ஆனால் பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடா கொண்டு வந்திருந்த பெட்டிகளில் தவறுதலாக மாற்றம் ஏற்பட்டிருந்தது. தற்பொழுது கொண்டுவந்த பெட்டியில் ஏற்கனவே காட்சியாக்கப்பட்ட பாடலின் ஒலிநாடா அந்த இடத்தில் இருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்ட சிவாஜி அதற்கு ஏற்றார் போல் தன் திறமையை வெளிக்காட்டி இருந்தார். முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் சென்னையில் ஒளிப்பதிவாகும் பொழுது அனைத்து பாடல்களையும் சிவாஜி ஒருமுறை கேட்டிருந்தார். இதனால் அனைத்து பாடல்களும் அவருக்கு நல்ல முறையில் புரிந்திருந்தது. நடிகர் சிவாஜியின் அபாரமான நினைவாற்றல் அவருக்கு மட்டும் இன்றி படக்குழுவினருக்கும் மிகப்பெரிய சாதகமாக அமைந்திருந்தது.
கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?
ஒலிநாடாவின் துணை இன்றியும், தன் இசைஞானத்தாலும், தன் நினைவாற்றலாலும் பாடல் வரிகளை மனதில் தானே பாடிக் கொண்டு காட்சிகளில் சிறிதளவு மாற்றமில்லாமல் தத்ரூபமாக பாடல் காட்சியை நடித்தார் சிவாஜி. அதைப் பார்க்க இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அந்த பாடல் காட்சி தான் அவன்தான் மனிதன் படத்தில் இடம் பெற்ற மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடல். இந்த பாடல் காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருந்தது.
அந்தப் பாடலை நாம் இப்போது பார்த்தோம் என்றாலும் பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு உதட்டில் அசைவு மிக கனகச்சிதமாக பொருந்தி இருக்கும். பாடல்கள் பின்னணியில் ஒலிக்காமலேயே தன் நினைவாற்றல் மூலம் பாடலை மனதில் வைத்து வெளிநாடுகளில் இந்த பாடல் காட்சியை திறமையாக படமாக்கியதில் நடிகர் திலகத்தின் பங்கு மிகப் பெரியது.