நடிகர் ஷாம் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் சம்சுதீன் இப்ராஹிம் என்பதாகும். 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான ஷாம் மிகப் பிரபலமாக சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
2001 ஆம் ஆண்டு 12B என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாம் தொடர்ந்து லேசா லேசா, இயற்கை, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, உள்ளம் கேட்குமே, கிக் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்தில் பிரபலமானார் ஷாம்.
2005 காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் 2010 காலகட்டத்திற்கு பிறகு தில்லாலங்கடி, வாரிசு போன்ற திரைப்படங்களில் இரண்டாம் கட்ட நடிகராக நடித்து வருகிறார் ஷாம்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் ஷாம் விஜயை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் என்னிடம் அரசியலுக்கு வரப்போவதாக கூறினார். மக்கள் எனக்காக நிறைய ஆதரவு கொடுத்திருக்காங்க அவங்களுக்காக நான் ஏதாவது செய்யணும்னு ஆசைப்படறேன். அதனால ஒன்னு ரெண்டு படம் நடிச்சு முடிச்சிட்டு அரசியல்ல இறங்கணும் என்று கூறினார் என்று பகிர்ந்திருக்கிறார் நடிகர் ஷாம்.