பிரபல காமெடி நடிகர் செந்தில் நடித்த படங்கள் எல்லாமே செம மாஸ் ஆக இருக்கும். அவர் கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர்களைத் தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை இரட்டையர்கள் என்றும் சொல்வார்கள். கவுண்டமணியிடம் அடி வாங்கியே நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார் செந்தில்.
அதிலும் கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை மறக்கவே முடியாது. படம் முழுக்கவே இவர்கள் செய்யும் அலப்பறைகள் மாஸானவை. விஜயகாந்த் நடிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1992ல் வெளியான படம் சின்னக்கவுண்டர்.
இந்தப்படத்தில் செந்தில், கவுண்டமணியிடம் யோசித்து யோசித்து கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நமக்கு சிரிப்பை வரவழைத்துவிடும். அந்தளவுக்கு மாஸாக இருக்கும். கவுண்டமணியும் டோபியாக வந்து அவரை உதைப்பார். படம் முழுக்க வயிறு குலுங்க வைக்கும் காமெடிகள் இடம்பெற்றுள்ளது.
திரும்ப திரும்ப படத்தில் அந்தக் காமெடியைப் பார்த்தாலும் நம்மை இருவரும் சேர்ந்து அப்படி ரசிக்க வைத்து இருப்பார்கள். அந்த வகையில் செந்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடனும் நெருங்கிய நட்பு கொண்டவர். ஆரம்பகாலத்தில் ரஜினி படங்கள் என்றாலே அதில் செந்திலும் இருப்பார். மனிதன், வேலைக்காரன், வீரா, எஜமான், முத்து, அருணாச்சலம், படையப்பா என்று அவருடைய படங்களில் தவறாமல் இடம்பிடித்தார் செந்தில்.
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் இப்போ என்ன செய்றாரு? அவரைப்பற்றி எந்தத் தகவலுமே இல்லையேன்னு நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
செந்திலோட மனைவி பெயர் கலைச்செல்வி. அவருக்கு ரெண்டு மகன்கள். மூத்த மகனின் பெயர் மணிகண்டன் பிரபு. அவர் ஒரு பல் மருத்துவர். வளசரவாக்கத்தில் ஒரு மருத்துவமனை வைத்துள்ளார். தடை உடை என்ற படத்தில் நடித்துள்ளார். அவரது இரண்டாவது மகனின் பெயர் ஹேமச்சந்திரபிரபு.
கார்த்தி கதாநாயகனாக நடித்த சகுனி படத்தை இயக்கிய சங்கர்தயாள் இப்போது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் செந்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.