தமிழ் சினிமாவில் சத்யராஜ் இடம் என்பது தனித்துவமானது. வில்லனாக அறிமுகமாகி, பின் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கடலோரக் கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக உயர்ந்தார். அதன்பின் வேதம் புதிது, அமைதிப்படை, வில்லாதி வில்லன், மாமன் மகள் உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் சத்யராஜ்.
இன்று வரை தனது மார்க்கெட் இழக்காமல் தந்தை கதாபாத்திரங்களிலும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சத்யராஜ் இருந்தாலே அந்தப் படம் ஹிட் என்னும் அளவிற்கு ராசியான நடிகராகவும் திகழ்கிறார். ஆனால் சத்யராஜுக்குப் பின்னால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் இருக்கும் என இதுவரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ் கடந்த 1979-ல் மகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிபிராஜ் மற்றும் திவ்யா ஆகிய பிள்ளைகள் உள்ளனர். சிபிராஜ் ஹீரோவாக ஒருபுறம் நடித்துக் கொண்டிருக்க அவரது தங்கை திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் திவ்யா தனது தந்தை குறித்தும், தாய் குறித்தும் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவிட்டிருக்கிறார்.
என் மகனுக்கு Forced Marriage பண்ணி வச்சோமா…? மனம் திறந்த நடிகர் நெப்போலியன் மனைவி சுதா…
அதில், “என் அம்மா கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு PEG டியூப் வழியாகத் தான் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அம்மா எங்களுக்கு விரைவில் திரும்பக் கிடைப்பார் என எங்களுக்குத் தெரியும். அப்பா கடந்த 4 வருடங்களாக Single Parent ஆக இருக்கிறார். அப்பாவின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போதும் நானும் அவருக்கு ஒரு Single Mom ஆக இருக்கிறேன். அப்பாவும் நானும் Powerful Single Moms Club-ல் இருக்கிறோம்.” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் என் தந்தை பெரியார் என்று ஆரம்பித்து இந்தப் பதிவைப் போட்டிருக்கிறார்.
இவரின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரியார் கொள்கைகளைப் பின்பற்றும் சத்யராஜுக்கு அவரின் மனைவி விரைவில் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.