செமயாக வீணை வாசிக்கும் நடிகர் சதீஷ்… வெச்சுசெய்யும் ரசிகர்கள்!!

நகைச்சுவை நடிகர் சதீஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைப் படமான தமிழ்ப் படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் படத்திலேயே பெயர் சொல்லும் அளவு பரிச்சையமாகினார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன்…

நகைச்சுவை நடிகர் சதீஷ் 2010 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைப் படமான தமிழ்ப் படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் படத்திலேயே பெயர் சொல்லும் அளவு பரிச்சையமாகினார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவருக்கு பெரிய அளவில் முகவரியினைக் கொடுத்தது எதிர் நீச்சல்  திரைப்படம்தான், சதீஷ்- சிவகார்த்திகேயன் காம்போ எப்போதும் சிறப்பான காம்போவாகவே இருக்கும்.

71ecb09f0a5902eeb7bb6bcbe80f5bad

அவர் முன்னணி நடிகரான விஜய்க்கும் நண்பனாக கத்தி திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றி இருப்பார், இவர் தற்போது கண்ணை நம்பாதே, ராஜ வம்சம், பூமி, பிஸ்தா, ரங்கா, தீமைதான் வெல்லும், டெடி, 4 ஜி போன்ற படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது ரஜினியின் அண்ணாத்த மற்றும் ப்ரெண்ட்ஷிப் படத்திலும் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்காத நிலையில் சதீஷ் ட்விட்டரில் வீணை வாசிப்பது போல் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். என்னது அப்படியா என ரசிகர்கள் வீடியோவை ஆவலாக ஓப்பன் செய்து பார்க்க, அவர் வாசிப்பதுபோல் ஆக்ஷன் காட்டி இருப்பது தெரிய வர ரசிகர்கள் செமையாக ட்ரோல் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன