தமிழ் சினிமாவில் முதன் முதலாக 1 கோடி சம்பளம் பெற்றவர் என்ற பெயரைப் பெற்றவர் தான் நடிகர் ராஜ்கிரண். 1970-களின் இறுதியில் திரைப்பட விநியோகஸ்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பல ஹிட் படங்களை விநியோகம் செய்திருக்கிறார். ராஜ்கிரண் வாங்கினாலே அந்தப் படம் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு நல்ல கதைகள் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து விநியோகம் செய்வார்.
1990-களின் பிற்பகுதியில் ராஜ்கிரண் தயாரிப்பாளராக மாறினார். அவர் தயாரிப்பாளராகி இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு கொடுத்த முதல் பட வாய்ப்புதான் என் ராசாவின் மனசிலே.. இந்தப் படத்தில் அவரே ஹீரோவாக நடித்ததுடன் வடிவேலுவையும் அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் வெள்ளி விழா கண்டது.
தொடர்ந்து அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகியபடங்களையும் தயாரித்து இயக்கி நடித்தார் தொடர்ந்து மூன்று படங்களும் இவருக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தது. இதன்பின் தனது சம்பளத்தினை அதிரடியாக உயர்த்தி மாணிக்கம் படத்தில் 1 கோடி சம்பளம் பெற்றார். அதன்பின் ராஜ்கிரண் நடித்த படங்கள் மண்ணைக் கவ்வியது. தொடர்ந்து பிளாப் கொடுத்தார்.
ஷாரூக்கான் எல்லாம் ஓரம்போ.. சக்கைப் போடு போடும் ஸ்ட்ரீ 2.. ஜவான் வசூலை பின்னுக்குத் தள்ளி சாதனை…
இந்நிலையில் இயக்குநர் சேரன் ராஜ்கிரணின் திறமையைப் பயன்படுத்த விரும்பி தான் இயக்கிய பாண்டவர் பூமி திரைப்படத்தில் மூத்த அண்ணனாக நடிக்க ராஜ்கிரணிடம் கேட்டார். அவரும் ஓகே சொல்ல பாண்டவர் பூமி தயாரானது. அதேசமயம் இயக்குநர் பாலா சேரனிடம் நந்தா படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கவிருந்த பெரியவர் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணை நடிக்க அணுகினார். இப்படி பாண்டவர் பூமியும், நந்தா படமும் அடுத்தடுத்து வெளியாகி ராஜ்கிரணை தமிழ்சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு தயார் படுத்தியது.
தொடர்ந்து சண்டக்கோழி படம் வெளியாகி ராஜ்கிரணின் சினிமா வாழ்க்கையை உச்சத்தில் நிறுத்தியது. இனி ராஜ்கிரண் படத்தில் இருந்தால் அந்தப் படம் கண்டிப்பா வெற்றி பெறும் என்ற கைராசி நடிகரானார். தொடர்ந்து தந்தை கதாபாத்திரங்கள், பண்ணையார் கதாபாத்திரம், தாத்தா கதாபாத்திரம் என தமிழ் சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பில் சிறந்து விளங்குகிறார் நடிகர் ராஜ்கிரண். இதுமட்டுமன்றி முனி படத்தில் பயமுறுத்தும் முனியாக நடித்து தனது பேஃவரிட் சாப்பிடும் காட்சியில் 2கே கிட்ஸ் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார் ராஜ்கிரண்.