18 வருசம் சினிமாவை விட்டு விலகி மீண்டும் ரிட்டர்ன் அடித்த ராஜா

பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் ராஜா அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார் இருந்தாலும் கடலோர கவிதைகள் தான் இவரை பிரபலமாக்கியது. பல படங்களில் முறை மாப்பிள்ளையாகவும் அமெரிக்க மாப்பிள்ளையாகவும்…

பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் ராஜா அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார் இருந்தாலும் கடலோர கவிதைகள் தான் இவரை பிரபலமாக்கியது. பல படங்களில் முறை மாப்பிள்ளையாகவும் அமெரிக்க மாப்பிள்ளையாகவும் வந்து அந்தக்கால அப்பாஸ், மாதவன் டைப்பில் 80களில் வந்து போனவர் இவர்.

d426f9d15678432653909c0b1839e381

சில படங்களில் இவரே முழுமையான ஹீரோவாக இருந்துள்ளார். சில படங்களில் வில்லத்தனத்திலும் மிரட்டியுள்ளார். மணிவண்ணன் இயக்கிய இனி ஒரு சுதந்திரம் என்ற படத்தில் அப்பாவியாக வந்து பின்னர் கலெக்டராக மாறி தியாகியை கொடுமை செய்யும் கதாபாத்திரம் இவருக்கு.

பாரதிராஜா தனது அறிமுகம் என்பதால் தனது கேப்டன் மகள் படத்தில் இவரையே படத்தின் ஹீரோவாக்கினார். அதில் வந்த எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று என்ற பாடல் மிக புகழ்பெற்றது. பாரதிராஜா இயக்கி இவர் நடித்த கருத்தம்மா படத்திலும் இவர்தான் ஹீரோ.

இப்படி ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை, நான்கு ஹீரோக்களில் ஒருவர், மூன்று ஹீரோக்களில் ஒருவர் என பல வெரைட்டியான பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் 18 வருடமாக சினிமாவில் நடிக்காமல் ஓ எம் ஆரில் உள்ள தனது மார்பிள் பிஸினஸை மட்டும் கவனித்து வந்தாராம்.

இவர் கடைசியாக நடித்த படம் முரளி, தேவயானி நடித்த கண்ணுக்கு கண்ணாக.

விக்ரமுடைய நட்பால் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ்வுக்கு அப்பாவாக 18 வருடம் கழித்து முகம் காட்டுகிறாராம் ராஜா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன