எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான் நடிகர் ரகுவரன். கேரளாவில் பிறந்த ரகுவரன் 1982-ல் ஏழாவது மனிதன் என்ற திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். ஒல்லியான தேகம், சுண்டினால் இரத்தம் வரும் சிவப்பு நிறம், கேட்டாலே அதிர வைக்கும் கட்டைக் குரல் என தென்னிந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரவுண்டு வந்தவர்.
ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான புரியாத புதிர் திரைப்படத்தில் ஐ நோ.. ஐ நோ.. என மிரட்டும் வசனம் பேசி அதன் மூலம் பிரபலமானவருக்கு தொடர்ந்து வில்லன் கதாபாத்திர வாய்ப்புகள் வந்தன.
மேலும் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் அமைதியாக நடித்து தனது மற்றொரு பரிணாமத்தினை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் நடிகை ரோகிணியை கடந்த 1996-ல் காதல் திருமணம் செய்தார். ஆரம்பத்தில் ரகுவரன் இவரிடம் மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொண்டாராம். இது அடிக்கடி நடக்குமாம்.
டைட்டில் செண்டிமெட்டில் சிக்கி ஹிட் வாய்ப்பினை இழந்த படம்.. நல்ல கதை இருந்தும் பிளாப் ஆன சம்பவம்..
ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என ரகுவரனின் தாயாரிடம் ரோகிணி கேட்க, அப்போது அவர் ‘அவன் என்ன படம் நடிக்கிறான்னு கேளு’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு தான் எந்தப் படத்தில் நடிக்கிறாரோ அந்தக் கதாபாத்திரமாகவே ரியல் வாழ்க்கையிலும் மாறி விடுவாராம் ரகுவரன்.
ரகுவரன் ஒரு பேட்டியில் வாழ்வில் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்று கேட்டபோது, நடிகனானது தான். ஏனெனில் எந்தக் கதாபாத்திரம் நடிக்கிறேனோ அதே பாத்திரமாக உள்ளே சென்று விடுவேன். அதிலிருந்து மீள நாட்கள் ஆகும்’ என்று பேசியிருப்பார். இவ்வாறு சினிமா மேல் தீராக் காதல் கொண்ட ரகுவரன் நிஜ வாழ்வில் தனது காதல் மனைவியை 2004-ல் விவாகரத்து செய்தார்.
அதற்குக் காரணம் அவரது குடிப்பழக்கமே. குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்த அவர் ஒருகட்டத்தில் தனது குடும்பத்தினைப் பிரிய நேரிட்டது. அதன் பின் உடல்நலக் குறைவு காரணமாக 2008-ல் இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்தார்.