பிரபல ஹீரோ ஒருவரின் தாயார் வெள்ளத்தில் சிக்கியதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காப்பாற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிருத்விராஜ் இவருடைய தாயார் மல்லிகா சுகுமாரன் என்பவரும் ஒரு நடிகை தான். இந்த நிலையில் மல்லிகா சுகுமாரன் தனது வீட்டில் இருந்தபோது திடீரென கனமழை பெய்ததால் அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்து கொண்டது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் உடனடியாக வந்து மல்லிகாவை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்
ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு வெள்ளத்தில் மல்லிகா சிக்கினார் என்பது அப்போதும் தீயணைப்புத் துறையினர் மீட்டு அவரை காப்பாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது