இந்தப் படமெல்லாம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? தந்தை தியாகராஜன் சொன்ன ஹிட் படங்களின் லிஸ்ட்..

By John A

Published:

தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். குறுகிய காலத்திலேயே ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், பாலுமகேந்திரா என அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து டாப் ஸ்டாராக ஜொலிக்க ஆரம்பித்தார். இவர் கால கட்டத்தில் வந்த விஜய், அஜீத் ஆகிய இருவருக்கும் கடும் போட்டி கொடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார் பிரசாந்த்.

இவரின் திரை வாழ்க்கையில் ஜீன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. காதல் இளவரசன் என்ற பட்டத்துடன் பல காதல் படங்களில் நடித்து இளைஞர்களின் மனதைக் கவர்ந்த நடிகராகத் திகழ்ந்தார் பிரசாந்த். ஆனால் 2010-க்குப் பின் பிரசாந்த்-ன் சினிமா வாழ்க்கை சரியத் தொடங்கியது.

இதனால் தெலுங்கில் இரண்டாம் நிலை நடிகராக நடிக்கத் தொடங்கினார். ஆனால் இவரது தந்தை இயக்குநர், நடிகர் தியாகராஜன் உந்துதலால் மீண்டும் அந்தகன் படம் மூலம் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி விட்டார்.

சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் கூட பிரசாந்த் பிரமாதப்படுத்தியிருப்பார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிரசாந்த் தவற விட்ட படங்கள் குறித்து தந்தை தியாகராஜன் பேசியிருக்கிறார். அதில் பிரசாந்த் குறுகிய காலத்திலேயே பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்தச் சமயம் அவருக்குத் தனியாக மேனேஜரை நியமித்தேன். அவர் பிரசாந்த் 2 கோடி, 3 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறிதால் அவரின் திரை வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

எனக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகுமா? சந்தேகத்தில் நடிக்க மறுத்த ரஜினி.. அதுவே அடையாளமாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம்..

இதனால் பிரசாந்துக்கு நானே கதைக் களங்களைத் தேர்வு செய்து கொடுத்தேன். அப்படி இயக்குநர் செல்வராகவனின் முதல் படமான துள்ளுவதோ இளமை அவருக்கு வந்ததே. அதில் பள்ளி மாணவன் கதாபாத்திரம் என்பதால் அதனை வேண்டாம் என்று சொல்லி விட்டோம். அதற்கு அடுத்தாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தீனா படத்திற்குக் கேட்டார். அப்போது பிரசாந்த் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அதில் நடிக்க முடியவில்லை.

மேலும் ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜீத் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டனர். ஆனால் பிரசாந்தை விட தபு சற்று முதிர்ச்சியாகத் தெரிந்ததால் அந்தப் படமும் வேண்டாம் என்று சொல்லி விட்டோம் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன்.

எனினும் அவரது திறமையால் 90-களின் இறுதியிலும், 2000 ஆண்டின் தொடக்கத்திலும் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து அஜீத், விஜய்க்கு கடும் போட்டியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.