தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது தனுஷ்சுக்கு 50வது படம். வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ஒரே படத்தில் 3 இயக்குனர்கள் நடித்துள்ளனர்.
செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் நடித்த காம்போ என்பதால் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா கலகலப்பாக சில தகவல்களைச் சொன்னார். என்னன்னு பார்ப்போமா…
செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்துல நடிச்சதால எனக்கு இந்தப் படம் நடிக்க கொஞ்சம் ஈசியா இருந்தது. எனக்கு அதுல 44 பார்முலா இருந்தது. இதுல கூட ரெண்டு போட்டு 46 பார்முலா தான் பண்ண வேண்டியிருந்தது.

ஆனா செல்வராகவன் சார் பார்முலாவை மறந்து வீட்டுல வச்சிட்டு வந்துட்டாரு. அவரு மாட்டிக்கிட்டாரு. பிரகாஷ்ராஜ் சார் கிட்ட இருந்து நிறைய விஷயம் கத்துருக்கேன்.
அவருக்கிட்ட இருந்து தான் உதட்டை அசைக்காம பேசுறது எல்லாம் கத்துக்கிட்டேன். தனுஷ் சாரைப் பத்தி சொல்லவே வேணாம். பிரகாஷ்ராஜ் சார் சொன்னாரு. 15 கிலோ சதையையும், 10 கிலோ எலும்பையும் வச்சிக்கிட்டுன்னு சொன்னாரு.
ஆனா அவரோட ஹார்ட் 0 வெயிட். பறவை மாதிரி இருக்குது. மூளை 1 லட்சம் வெயிட்ல இருக்கு. ஹார்ட்டும், மூளையும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. அதனால அது அப்படித்தான் இருக்கும்.
அதனோட வளர்ச்சி. துள்ளுவதோ இளமையில இருந்து இன்னைக்கு ஆரம்பிச்சி இது 50வது படம். இதுல அவரை அவரே இயக்கி இருக்காரு. எனக்கு அவரு நடிச்சிக்காட்டைச் சொல்லும் போது அவரை நடிச்சிக்காட்டச் சொல்லுவேன்.
அந்த மாடுலேஷனை போன்ல ரெக்கார்டு பண்ணிக்கிட்டு நைட்ல ஹெட்போனை மாட்டிக்கிட்டு கேட்டுக்குவேன். திரும்ப வரும்போது நடிச்சிக் காட்டுவேன். எனக்கு அது ரொம்ப ஈசியா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வந்த தனுஷ் முதன்முறையாக செல்வராகவனையே இயக்குகிறார். அது போல வாலி, குஷி என சூப்பர்ஹிட் படங்களை எடுத்து ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவையும் தனுஷ் இயக்கி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் வந்து கொண்டே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


