சைட் அடிக்க கூட எனக்கு தகுதி இல்லையா….? நடிகர் பார்த்திபன் ஓபன் டாக்…

பார்த்திபன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 16 படங்களை இயக்கி 14 படங்களை தயாரித்து 70-க்கும்…

parthipan

பார்த்திபன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 16 படங்களை இயக்கி 14 படங்களை தயாரித்து 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பார்த்திபன்.

1984 ஆம் ஆண்டு கே பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் பார்த்திபன். 1984 முதல் 1991 வரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார் பார்த்திபன். 1989 ஆம் ஆண்டு புதிய பாதை என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் பார்த்திபன். அதை தொடர்ந்து பல நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் பார்த்திபன்.

1990களில் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன் தாலாட்டு பாடவா, உன்னை வாழ்த்தி பாடுகிறேன், தாவணி கனவுகள், சுயம்வரம், உன்னருகே நானிருந்தால், உன்னை கொடு என்னை தருவேன், வெற்றி கொடி கட்டு, ஆயிரத்தில் ஒருவன், நானும் ரவுடிதான், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவராக இருக்கிறார் பார்த்திபன்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் இளம் வயதில் தான் கடந்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அதனால் எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. மற்ற குழந்தைகளை போல் நான் விளையாடியது இல்லை. மற்ற பசங்களைப் போல் நான் சைட் அடிச்சது கூட இல்லை. ஏனென்றால் சைட் அடிப்பதற்கு கூட எனக்கு தகுதி இல்லை என்று நினைத்துக் கொண்டு பெண்களை பார்த்தால் தலை குனிந்து சென்று விடுவேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் பார்த்திபன்.