தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் ஒரு காலத்தில் கலக்கியவர் பாண்டியராஜன். இவருக்கு அந்த காலத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அதற்குக் காரணம் அவரது வெகுளித்தனமான பேச்சும் குறும்புத்தனமான சேட்டைகள் தான். காமெடி நடிகர்கள் தனியாகச் செய்து வந்த டிராக்கை தனது படக் கதையோடு காமெடியை உருவாக்கி ரசிக்க வைத்து படங்களைக் கொடுத்தவர்.
ஆரம்பத்தில் சினிமாவில் இவர் நடிக்க வந்த போது அவரின் உருவத்தைப் பார்த்து நீயெல்லாம் படங்களில் கதாநாயகனாக நடிக்க முடியாது என பல இடங்களில் நிராகரித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாண்டியராஜன் தன் மீது இருக்கும் நம்பிக்கையில் மீண்டும் பல இடங்களில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி சென்றார்.
அதன் பலனாக ஆண்பாவம் மற்றும் பாட்டி சொல்லை தட்டாதே போன்ற படங்கள் வெற்றி மூலம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். பிரபு மற்றும் ரேவதியை வைத்து பாண்டியராஜன் இயக்கிய கன்னிராசியில் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவர் திறமையை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டியது.
கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?
அதன்பிறகு இவர் இயக்கி நடித்த ஆண்பாவம் திரைப்படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் ஒரு சாதனை படைத்தது. இந்த வெற்றியின் அடையாளமாக பாண்டிராஜன் எனும் பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆண்பாவம் திரைப்படம் தான். நான் ஆண்பாவம் என்ற படத்தை எடுத்தேன் அந்த படத்தில் வந்த வருமானத்தில் வீடு மற்றும் கார் திருமணம் அனைத்தையும் ஒரே படத்தின் வருமானத்திலேயே செய்து முடித்தேன் என தெரிவித்தார் .
சமீபத்தில் தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டு இவர் பேசிய போது என்னை பலருக்கும் ஒரு காமெடி நடிகனாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் மூன்று பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியர் வேலை பார்த்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். தற்போது அஞ்சாதே படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் மகன் பிரித்வி சமீபத்தில் வெளியான புளு ஸ்டார் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.