திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை தனுஷ் போட்ட நெத்தியடி பதிவு..

By John A

Published:

நடிகர் நெப்போலியன்-சுதா தம்பதியின் மூத்த தனுஷ்- அக்சயா திருமணம் தான் இப்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே நிரந்தரமாகக் குடியேறினார். அங்கே சாப்ட்ஃவேர் நிறுவனம் நடத்தி வரும் நெப்போலியன் தனது மகனுக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை நிச்சயித்தனர். இவர்களது நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இம்மணவிழாவில் ஏராளமான திரைப்பலங்கள் ஜப்பான் சென்று கலந்து கொண்டனர். மேலும் இவர்களுடைய திருமண வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது. மேலும் மணமகள் அக்ஷயா தனுஷை எப்படி திருமணம் செய்ய சம்மதித்தார் என்ற கேள்விக்கு நெப்போலியன் குடும்பம் உள்பட அவருமே நிறைய பேட்டிகளைக் கொடுத்திருக்கிறார்.

மறைந்த நடிகர் டெல்லி கணேஷூக்கு இந்திய விமானப் படையின் மரியாதை.. தேசியக் கொடி மற்றும் விமானப்படை கொடி போர்த்தி அஞ்சலி

இவர்களுக்கு ஒருபுறம் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்க சிலர் கமெண்டுகளில் இவர்களை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதுமாப்பிள்ளையான நெப்போலியன் மகன் தனுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் எங்களது திருமணத்திற்கு வந்திருந்து ஆசி வழங்கிய, கலந்து கொண்ட, வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நிறைய பேர் இன்ஸ்டாகிராமில் பாசிடிவ்வாகவும், சிலர் நெகடிவ்வாகவும் கமெண்டுகள் போட்டிருந்தீர்கள்.

அது எனக்குப் பிரச்சினை இல்லை. என்னை அது எதுவும் பாதிக்கவில்லை. அது எனக்கு மோட்டிவேஷனாகத்தான் இருக்கு. உங்ககிட்ட Prove பண்ணி காட்டணும் தான் அந்த கமெண்ட்ஸ் இருக்கு. Prove பண்ணிட்டு உங்ககிட்ட பேசிக்கிறேன். என்னை மாதிரி Give Up பண்ணாம முயற்சி பண்ணிட்டே இருந்தா எதை வேணுமனாலும் Achieve பண்ணலாம்.

இவ்வாறு அந்தப் பதிவில் தனுஷ் கூறியிருக்கிறார்.