பிரபல தெலுங்கு நடிகர் நானி தமிழில் நான் ஈ படத்தில் நடித்திருப்பார். மிக க்யூட்டாக ஜாலியாக இவர் நடிப்பதாலும் மிக சார்மிங்கான நடிகர் என்பதாலும் இவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகம். இவரின் படங்களுக்கு மவுசு அதிகம்.
இந்நிலையில் தனியார் சேனலுக்கு நானி அளித்த சமீப பேட்டி ஒன்றில் சின்ன வயசில் இருந்து எனக்கு கமல்ஹாசன் தான் பிடிக்கும்.
வளரும் பருவத்தில் கமல்ஹாசன் தான் எனக்கு பிடித்த நடிகர். அவருக்கு சினிமா மீது இருந்த அர்ப்பணிப்பை பார்த்து நானும் சினிமாவை நேசிக்க தொடங்கினேன். சினிமாவில் எவ்வளவு சம்பாதித்தாலும் மீண்டும் அதை சினிமாவிலேயே முதலீடு செய்யும் அற்புதமான கலைஞர் கமல் என நானி கூறியுள்ளார்.