காதலனுடன் மறைவிடம் … செருப்பால் அடித்திருக்கணும்.. தப்பி ஓடிய காதலனையும் தான்.. எம்எஸ் பாஸ்கர் ஆவேசம்

சென்னை: காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா? வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று…

Actor MS Bhaskar releases statement regarding Anna University student

சென்னை: காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா? வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று எம்எஸ் பாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படித்த என்ஜினீயரிங் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வாலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரன் (வயது 37) என்பவர் மீது 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். . ஞானசேகரன் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர். அவர் கோட்டூர்புரத்திலும், அடையாறிலும் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இவர் மீது 14 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. 2011-ம் ஆண்டு பாலியல் வழக்கு ஒன்றிலும், 2014-ம் ஆண்டு திருட்டு வழக்கு ஒன்றிலும் ஞானசேகரன் சிறைக்கு சென்று வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலாளிகளை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பகல், இரவு என எந்த நேரத்திலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திரமாக வலம் வருவாராம். காவலாளிகள் இவரை கண்டுகொள்வதில்லையாம். இதனை பயன்படுத்தி, தனது காம விளையாட்டுகளை நடத்தி வந்தாராம். சம்பவம் நடந்தபோது, மாணவியுடன் உட்கார்ந்திருந்த அவரது காதலனை ஞானசேகரன் மிரட்டி, விரட்டி அடித்துள்ளார். பயந்து போன அவர், மாணவியை தனியாக தவிக்கவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டாராம். இந்த வழக்கில் ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவருக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி தருவதற்காக போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

அதற்காக கைதான ஞானசேகரன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வருகிற ஜனவரி 8-ந்தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக எம்எஸ் பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு கடந்த திங்களன்று பாலியல் வன்கொடுமை.. பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்.. உடனே பொதுவாக சொல்லப்படும் கருத்து ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது” சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது யார் குற்றம்?

கல்வி கற்கச் செல்லுமிடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா?

காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா?

வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும்.

அவனை மட்டுமல்ல, தப்பி ஓடிய அந்தக் காதலனையும் தான்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிள் போட்டா பாதுகாப்பு தர முடியும்?

பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன்..

மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பயனில்லை.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை.

இதில் ஒருவேளை அரசைக் குறை கூறினால் அது நியாயமே இல்லை. வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்” இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.