எம் எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் முத்துப்பேட்டை சோமையா தேவர் பாஸ்கர் என்பதாகும். 1987 ஆம் ஆண்டு திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் எம் எஸ் பாஸ்கர்.
1990களில் சின்னத்திரைக்கு வந்த எம்எஸ் பாஸ்கர் பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் எம்எஸ் பாஸ்கர். இந்த தொடரில் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டாபி என்ற பெயரை வைத்தே பல காலம் ரசிகர்கள் அழைத்து வந்தனர். 2000 கால கட்டத்திற்கு பிறகு சினிமாவில் சிறுசிறு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் எம் எஸ் பாஸ்கர்.
டும் டும் டும், கோட்டை மாரியம்மன், கன்னத்தில் முத்தமிட்டால், தமிழன், மிலிட்டரி, அன்பே அன்பே, திருப்பாச்சி, சிவகாசி, வீராச்சாமி, சிவாஜி, அழகிய தமிழ் மகன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் எம் எஸ் பாஸ்கர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட எம்.எஸ். பாஸ்கர் சினிமாவில் தனது நிலைமையை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் சினிமாவிற்குள் டப்பிங் கலைஞராக வந்து பிறகு சீரியலில் நடித்து அதற்கு பிறகு நடிகராக நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு பிறகு வந்த தம்பிகள் இன்று பெரிய உயரத்தில் இருக்கிறார்கள். அதேபோல் என்னுடன் வந்த ஒரு சிலர் மேலே வர முடியாமலும் இருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது என்னுடைய இந்த நிலைமை சரிதான் எனக்கு அது போதும் என்ற மனநிலைமையில் தான் இருக்கிறேன் என்று பகிர்ந்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.