இவரு பெரிய மச்சக்காரன்யா… ஹாட்ரிக் வெற்றி… வசூலில் கேரண்டி… 80களில் கலக்கிய மோகன்!

By Sankar Velu

Published:

தமிழ்ப்பட உலகில் மச்சக்காரர் என்றால் நடிகர் மோகனைத் தான் சொல்ல வேண்டும். மைக் மோகன் என்றால் தான் பலருக்கும் தெரியும். இவர் நடித்த முதல் 3 படங்களும் செம ஹிட். மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள். தமிழில் தொடர்ந்து எந்த நடிகரும் அதுவும் தனது ஆரம்பகாலத்தில் ஹாட்ரிக் வெற்றியை எட்டியது இல்லை.

இளையராஜாவுக்கு 100வது படம் மூடுபனி. அவரது 300வது படம் உதயகீதம். இந்த இரண்டுமே மோகனின் படங்கள். ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைத்தார்கள் என்றால் அது இசைஞானி இளையராஜாவுக்குத் தான். என்ன படம் தெரியுமா? அதுவும் மோகன் படம் தான். பயணங்கள் முடிவதில்லை. இப்படி மோகனின் பெருமையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அதே போல ஒரே ஆண்டில் அதிகமான படங்களில் நடித்த ஒருசில நடிகர்களில் இவரும் ஒருவர்.

Mohan
Mohan

இவர் புகழின் உச்சியில் இருந்த போதும், இவரது படங்களைப் பொருத்தவரை கதாநாயகிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். தாய்மார்களைக் கவர இதுவும் ஒரு காரணம்.

மோகன் சொந்தக்குரலில் பேசி நடித்த முதல் படம் பாசப்பறவைகள். மோகனை தமிழ்த்திரை உலகில் கோகிலா படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலுமகேந்திரா. அவரது இயக்கத்தில் மோகன் நடித்த ஒரே படம் ரெட்டைவால் குருவி.

இதையும் படிங்க… சிங்களத் தமிழில் உலக நாயகன் கலக்கிய ‘தெனாலி‘.. தமிழ் சொல்லிக் கொடுத்தது இந்த பிரபலமா?

இவர் கால்ஷீட் விஷயத்தில் எப்போதுமே குளறுபடி செய்யாதவராம். இவர் படம் என்றாலே அது வசூலில் கேரண்டி தான். கௌரவ வேடங்களில் நடித்தால் கூட போதும் என்று நினைத்து வரும் தயாரிப்பாளர் களுக்காக சில படங்களில் அப்படியும் நடித்துக் கொடுத்தாராம்.

தனது ரீஎன்ட்ரியும் ஹீரோவாகவே நடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் வந்த பல படவாய்ப்புகளையும் மறுத்தாராம். அன்புள்ள காதலுக்கு என்ற படம் இவர் கடைசியாக நடித்த படம். தயாரித்து, இயக்கி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பட உலகின் வெள்ளிவிழா நாயகன் யார் என்றால் அது மோகன் தான். இவர் நடிப்பில் பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. பாடல்கள் எல்லாமே இதமானவை. இரவு நேரங்களிலும், மன அமைதிக்கும் இவரது பாடல்களைக் கேட்டாலே போதும். அவ்வளவு சுகமாக இருக்கும். இப்போதும் யூடியூபில் இவரது பாடல்களைக் கேட்டும் பார்த்தும் மகிழலாம்.