வாழ்க்கைத் தத்துவத்தை யதார்த்தமாக ஒரே பதிலில் சொன்ன மம்முட்டி.. இவ்வளவு புரிதலா?

By John A

Published:

முகம்மது குட்டி பனபரம்பில் இசுமாயில் என்று இயற்பெயர் கொண்ட நடிகர் மம்முட்டிக்கு தற்போது 72 வயதாகிறது. ஆனாலும் இன்றும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என வாழ்க்கை நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து 40வயது மனிதர் போல தோற்றமளிக்கிறார். மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கக் கூடிய மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானும் பிரபல நடிகராகத் திகழ்கிறார்.

3 தேசிய விருதுகள், 10-க்கும் மேற்பட்ட கேரள அரசின் விருதுகள், தனியார் விருதுகள் என இந்திய அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் மம்முட்டி வாழ்க்கைத் தத்துவத்தை எதார்த்தமாக ஒரே வரியில் கூறியிருக்கிறார்.

சாதாரணமாக பிரபலங்களை நினைவு கூறும் போது அவர்கள் சாதித்த அல்லது சமுதாயத்திற்காக போராடிய பல விஷயங்களை வைத்தே அவர்களை நினைவு கூறுவோம். அந்த வகையில் நடிகர் மம்முட்டியிடம் பேட்டி ஒன்றில் உங்களை மக்கள் எவ்வாறு நினைவு கூற வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதில் மம்முட்டி அளித்த பதில் தான் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைராகி வருகிறது.

அதில், “இந்த உலகம் அழியும் வரை உங்களை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. மிக மிகச் சிறந்த மனிதர்களே நினைவு கூறப்படுகிறார்கள். இருக்கும் ஆயிரம் நடிகர்களில் நானும் ஒருவன். ஓராண்டுக்கு மேல் மக்களின் நினைவில் இருப்பேனா என நினைவு கூறத் தெரியாது.” என்று கூறியிருக்கிறார்.

வேண்டாம் எனச் சொல்லிய தயாரிப்பாளர்.. அடம்பிடித்த ஹீரோ.. உருவான நேசமணி

இன்று சோஷியல் மீடியாக்களின் அபார வளர்ச்சிக்குப் பிறகு எப்படியாவது புகழ் பெற வேண்டும் என நினைத்து தங்கள் திறமைகளை பலர் வீடியோக்களாகவும், ரீல்ஸ்களாகவும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் மம்முட்டியின் இந்த பதில் ஆழமான கருத்தாக உள்ளது.

உண்மைதான். வேகமாகச் சுழலும் இந்த உலகத்தில் அடுத்த நொடி என்ன என்பது குறித்து யோசிக்கும் வேளையில் எண்ணற்ற தலைவர்களையும், பல திறமையாளர்களையும், விஞ்ஞானிகளையும் நாம் மறந்தே போய்விட்டோம் என்பது தான் உண்மை. பெற்ற தாய், தகப்பன் தவறினால் கூட வீடியோகால் மூலம் இறுதிச் சடங்கு செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் செல்லும் கல்நெஞ்சம் படைத்த உலகமாக மாறிவிட்டது தான் நிதர்சன உண்மை. நடிகர் மம்முட்டியின் இந்த வயதுக்கேற்ற அனுபவமும், பண்பட்ட பேச்சும் வாழ்க்கைத் தத்துவங்களை உதிர்க்கச் செய்திருக்கிறது.