மாதவன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவர் தமிழ் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார் மாதவன்.
தொடர்ந்து ரன், கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், ஆய்த எழுத்து, மின்னலே, லேசா லேசா, பிரியமான தோழி, ஜே ஜே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் மாதவன்.
2010 காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வபோது கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார் மாதவன். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மாதவன் சூர்யா நடித்த படம் ஒன்றில் தான் நடிக்க இருந்ததாக பகிர்ந்துள்ளார்.
மாதவன் கூறியது என்னவென்றால் சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான். அந்தப் படத்தின் முதல் பாகம் எனக்கு பிடித்திருந்தது இரண்டாவது பாகம் பிடிக்கவில்லை. அதனால் நான் நடிக்கவில்லை. ஆனால் அந்த படத்திற்காக சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு சிக்ஸ் பேக் வருவதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துள்ளார் என்று கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்று கூறியிருக்கிறார் மாதவன்.