சேது பட ரிலீஸ்-க்கு பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? கருணாஸை பாலா அறிமுகப்படுத்திய சீக்ரெட்..

By John A

Published:

இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் கூர் தீட்டப்பட்ட வைரங்களில் ஒருவர் தான் இயக்குநர் பாலா. பாலுமகேந்திராவிடம் சினிமா பாடம் கற்றுக் கொண்டு சேது படத்தின் மூலமாக திரையுலகில் முதன் முதலாக இயக்குநராக அடியெடுத்து வைத்தார். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே படங்கள் இயக்கியிருந்தாலும் ஒவ்வொரு படமும் பாலா கொடுத்த உழைப்பு அலாதியானது. இன்று பாலாவின் சாயலில் பல்வேறு இயக்குநர்கள் படம் எடுத்து வெற்றி கொடுக்கின்றனர்.

பாலா அறிமுகப்படுத்திய நடிகர்களில் பலர் இன்று புகழ்பெற்று விளங்குகின்றனர். அவர்களில் ஒருவர் தான் கருணாஸ். மேடைக்கச் சேரிகளிலும், தெம்மாங்குப் பாடல்களையும் பாடி பாடகராக விளங்கி வந்த கருணாஸை நந்தா படம் மூலமாக காமெடியனாக அறிமுகப்படுத்தி இன்று குணச்சித்திர நடிகர் வரை வளர்ந்திருக்கிறார்.

ஆனால் பாலாவுக்கு கருணாஸ் அவரை அறியாமலேயே முதல் ஹிட்டுக்கு அயராது உழைத்திருக்கிறார். பாலாவின் முதல் படமான சேது திரைப்படம் அனைத்து பணிகளும் முடிவுற்று ரிலீஸ்-க்குக் காத்திருந்தது. படத்தினை யாரும் வாங்க முன்வரவில்லை. கருணாஸ் அப்போது தான் சேர்த்து வைத்திருந்த 3 இலட்ச ரூபாய் பணத்தினை வைத்து சினிமா தொழில் செய்யலாம் என நினைத்து மனைவி கிரேஸிடம் கேட்டிருக்கிறார்.

யுவனுக்கு அஜீத் செய்த பேருதவி.. திருப்பத்தைக் கொடுத்த தீனா..

கிரேஸ் இந்தத் தொழில் அனுபவம் கிடையாது எனவே யோசியுங்கள் என்று அறிவுரை கூற கருணாஸ் அப்போது சேது படத்தின் பிரிவியூ ஷோவை நண்பர் வாயிலாக பார்த்திருக்கிறார். படத்தினைப் பார்த்து பிரமித்தவர் இப்படத்தினை சென்னை ஏரியாவில் எப்படியாவது நாம் வாங்கி வெளியிட வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்.

ஆனால் அதற்கு பட்ஜெட் ஒத்து வரவில்லை. மேலும் பலரும் படத்தின் முடிவு நன்றாக இல்லை. எனவே நஷ்டமடைந்து விடாதே என்று அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் கருணாஸ் முதலில் படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்று வெளியிட இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக கானக் கருங்குயிலே பாடல் கோவில் திருவிழாக்களில் சக்கைப் போடுபோட இதனையடுத்து படத்தினை ரிலீஸ் செய்தார்கள். படம் ஒருவாரத்திற்குப் பின் அனைத்து ஏரியாக்களிலும் களைகட்ட ஆரம்பித்தது.

இவ்வாறு சேதுவின் வெற்றிக்குப் பின்னால் கருணாஸின் உழைப்பும் இருந்திருக்கிறது. இதனாலேயே பாலா அடுத்த படமான நந்தா படத்தில் லொடுக்குப் பாண்டியாக கருணாஸை அறிமுகப்படுத்தினார்.