கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான் நடிகர் கலாபவன் மணி. கேரளத்தில் இயங்கி வரும் நகைச்சுவைக் குழுவில் மிமிக்ரி கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளினால் சினிமாவில் நுழைந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிப் படங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் அக்ஷரம் என்ற படத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக தனது நடிப்பைத் தொடங்கினார். லோஹிததாஸ் திரைப்படமான சல்லாபம் (1996) மூலம் அவர் தனது முதல் பெரிய திருப்புமுனையைப் பெற்றார். தமிழில் ஜெமினி படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. இப்படத்தில் விக்ரமுடன் இவர் மிமிக்ரி செய்யும் காட்சிகளும், சண்டைக் காட்சிகளில் விலங்குகள் போல நடித்தும் குழந்தைகள் மனதைக் கவர்ந்தார்.
வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞாணும் என்ற மலையாளப் படத்திற்காக அவருக்கு தேசிய விருதும், கேரள அரசின் மாநில விருதும் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் கொச்சியில் உள்ள விடுதி அறையில் இரத்த வாந்தி எடுக்க தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலில் ஆல்ஹால் அதிகம் கலந்திருப்பது தெரிய வந்தது. தற்போது அவரது மரணம் குறித்து கேரள ஐபிஎஸ் அதிகாரி திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.
கடைசிவரை கொலைகாரன் யாரென யூகிக்க முடியாத அதிபயங்கர கதை… அப்பவே இப்படி ஒரு படமா?
அதாவது, கலாபவன் மணி தினமும் 12 பாட்டில் அளவிற்கு பீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர். குடியால் கல்லீரல் செயலிழந்த பின்னரும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை. இரத்த வாந்தி எடுத்த பின்னரும் அவர் பீர் குடித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் மரணத்தை அவரே தேடிக் கொண்டார். அவரது உடலில் அளவுக்கதிமான ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்தது. என்று அவர் கூறினார்.
கலாபவன் மணி மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும், மர்மங்களும் இருந்த நிலையில் கேரள ஐபிஎஸ் அதிகாரி இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் பலர் இதேபோல் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.