Dhanush Nayanthara : நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்.. நீதிபதி அதிரடி உத்தரவு

சென்னை: நானும் ரவுடி தான் பட பிடிப்பு காட்சிகளை தங்களது திருமண டாக்குமெண்டரியில் பயன்படுத்தி அதனை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை…

Actor Dhanush's Wonder Bar company has filed a case in the Chennai High Court against actress Nayanthara

சென்னை: நானும் ரவுடி தான் பட பிடிப்பு காட்சிகளை தங்களது திருமண டாக்குமெண்டரியில் பயன்படுத்தி அதனை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நடிகை நயன்தாரா விக்னேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களது காதல் நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பின் போது உருவானது. அந்த படத்தை தயாரித்தது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தான். இதனிடைமேய நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியிருந்தார்.

இதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, இந்தியா முழுவதும் திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிர்வணத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.