35 கோடி சம்பளம்.. போயஸ் கார்டன் வீடு.. மிரளவைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு

By John A

Published:

இயக்குநர் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தனது 50-வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்து வெற்றியைக் கொடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவரது உருவத்தைப் பார்த்து கேலி செய்தவர்களுக்கு தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்து நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடல்கள், பின்னனி என கலக்கி வருகிறார் தனுஷ். தான் நடித்த முதல் மூன்று படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார்.

இதனையடுத்து இவர் நடித்த படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன. எனினும் பாலுமகேந்திரா, சுரேஷ் கிருஷ்ணா, செல்வராகவன் என கைதேர்ந்த இயக்குநர்களால் பட்டை தீட்டப்பட்டார். இப்படி பட்டை தீட்டப்பட்ட தனுஷ் என்கிற வைரம் வெற்றிமாறன் கையில் சென்றவுடன் ஆடுகளம் படத்தின் வெற்றியால் மதிப்புமிக்க வைரமாக மாறினார். தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், வடசென்னை என படங்களில் நடித்து கைதேர்ந்த நடிகராக மாறினார் தனுஷ்.

ஆரம்பத்தில் சில லகரங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தனுஷ் இன்று ஒரு படத்திற்கு சுமார் 20 முதல் 35 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். மேலும் வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் தனுஷ் அதன் மூலம் 3, வேலையில்லாப் பட்டதாரி, காக்கிச்சட்டை, மாரி, எதிர்நீச்சல் போன்ற படங்களையும் தயாரித்தார். மேலும் லக்ஸ், பாராசூட், 7up, Center fresh போன்ற நிறுவனங்களின் விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார் தனுஷ்.

நடிகர் பிரசாந்துக்கு எதிராக பாய்ந்த வழக்கு.. புல்லட்டில் சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்

இதனைத் தவிர்த்து சூப்பர் ஸ்டாரின் மருமகனான தனுஷ் அவரைப் போலவே போயஸ் கார்டனில் தற்போது பெரிய சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 150 கோடி பெறும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் ஆழ்வார் பேட்டையில் 18 கோடியில் பங்களா ஒன்றையும் வைத்திருக்கிறார் தனுஷ். இதனைத் தவிர தனுஷிடம் 1.65 கோடி மதிப்பிலான ஆடி கார், 98 லட்சம் மதிப்பில் Ford கார், 45 லட்சம் மதிப்பில் Jaguar Car உள்ளிட்டவற்றையும் வைத்திருக்கிறார்.

சமூக வலைதளப் பக்கங்களைப் பொறுத்தவரை இன்ஸ்ட்டாகிராமில் 7.3 பாலோயர்களையும், எக்ஸ் தளத்தில் 11.6 மில்லியன் பாலேயர்களையும் பெற்றிருக்கிறார் தனுஷ். இவற்றின் மூலம் வருமானம் கிடைக்கிறது. மொத்தத்தில் தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 230 கோடிக்கும் அதிகமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.