பாத்திரம் கழுவி, வீடு துடைப்பாரா ரஜினி… சவால் விடுத்துள்ள நடிகர் சிரஞ்சீவி!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனாவின் கோரப் பிடியில் தற்போது இந்தியாவும் சிக்கித் தவித்து வருகின்றது. கொரோனா தொற்றினைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி முதல் மே…

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனாவின் கோரப் பிடியில் தற்போது இந்தியாவும் சிக்கித் தவித்து வருகின்றது. கொரோனா தொற்றினைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் சினிமாப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களுக்கு ஏதாவது சேலஞ்ச் விட்டு அதை செய்ய வைத்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரேயா சரண் தன் கணவர் வீட்டில் பாத்திரம் கழுவும் வீடியோவினை வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால்விட, தற்போது இந்த சவால் தெலுங்கு நடிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

அதாவது ஜூனியர் என்.டி,ஆர், வீட்டு வேலைகள் செய்யும் வீடியோ வெளியிடும்படி சேலஞ்ச் கொடுக்க சமீபத்தில் பிரபல இயக்குனர் ராஜமௌலி சவாலை ஏற்று வீடு துடைக்கும் வீடியோவினை வெளியிட்டார்.

6e0079134999105666ec6aa91cc3b3f8

ராஜமௌலியைத் தொடந்து, வெங்கடேஷ் மற்றும் சிரஞ்சீவி வீடியோவை வெளியிட்டுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி இந்த சேலஞ்சினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினி பாத்திரம் கழுதல், வீடு துடைத்தல் வீடியோவினை எப்போது வெளியிடுவார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன