கொடூர கொரோனாவின் தாக்கம் உலகம் எங்கும் பரவி வருகிறது.சீனா, இத்தாலிக்கு பிறகு அமெரிக்காதான் தற்போது கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. பிரிட்டனிலும் கொரோனா தாக்கம் உள்ளது பிரிட்டன் பிரதமருக்கே கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனில் 76 வயதான பிரபல நடிகர் உயிரிழந்தார்.
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் 7,8 பாகங்களில் நடித்திருந்த ஆண்ட்ரு ஜேக் பிரிட்டனின் சுர்ரே பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவர் மனைவி கூறுகையில் எந்த வித வேதனையுமின்றி அவர் பிரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்