நடிகர் அஜித்தின் செயல் நியாயமா? சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்!

By Velmurugan

Published:

நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதை தொடர்ந்து இயக்குனர் மகில் திருமேனியுடன் அஜித் இணைய இருப்பதாகவும் இந்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மிக பிரமாண்ட அறிவிப்பு ஒன்றை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து இரண்டு செட்யூல்களை முடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துபாய் மற்றும் அஜர்பைஜான் நாடுகளில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜர்பைஜான் நாட்டின் நிலவும் கடுமையான பனிப்புயலின் காரணமாக தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழு சென்னைக்கு திரும்பி உள்ளது. இதற்கிடையில் நடிகர் அஜித் ஜனவரி மூன்றாம் தேதி தன் மகளின் பிறந்தநாளை துபாயில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார். அதன் பின் நான்கு ஐந்து தேதிகளில் சென்னை திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கிடையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காலமானார். நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய் என பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் பல நட்சத்திரங்கள் வீடியோக்கள் மூலமாகவும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் இன்னும் கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்காக எந்த இரங்கல் செய்தியையும் வெளியிடவில்லை என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கோபமாக இருந்து வருகிறது. விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள் ஆகவும் மாறி உள்ளது. இந்த நேரத்தில் நடிகர் அஜித் விஜயகாந்தின் குடும்பத்தை நேரில் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இதற்கு நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரின் மகன்கள் அனுமதி வழங்காமல் அமைதி காத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்தின் போஸ்டர்களை கிழிக்க வைத்த எம் ஜி ஆர்! நடந்தது என்ன!

இதற்கு காரணம் நடிகர் அஜித், விஜயகாந்தின் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவிக்க வருவதாக கூறி இருந்த நேரம் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதாவது ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என நினைக்கும் அஜித் நள்ளிரவு மூன்று மணி அளவில் விஜயகாந்த் குடும்பத்தை நேரில் சந்திக்க வருவதாக கூறியிருந்தார். இந்த செய்தி அவரின் குடும்பத்தினர் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜயகாந்தின் மறைவின் பொழுது மிகப்பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை ஒப்பிடும் பொழுது அஜித் ஒரு இயல்பான நடிகர் தான். ஆனால் இரங்கல் செய்தி தருவதற்கு கூட நள்ளிரவு மூன்று மணியை தேர்ந்தெடுப்பது மிகச்சிறந்த முறையல்ல. ரசிகர்கள் ஒன்று கூடுவது, கூட்ட நெரிசல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அஜித் இப்படி கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

எப்படி இருந்தாலும் அஜித்தின் இந்த செயல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தாலும் இந்த அளவிற்கு கெத்து காமிக்க கூடாது எனவும் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.