கார் ரேஸிங் அணிக்கு ஓனரான அஜீத்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

By John A

Published:

நடிகர் அஜீத் புதிதாக கார் பந்திய அணியை உருவாக்கி இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நடிகர் அஜீத்துக்கு கார் ரேஸிங் என்றால் உயிர். இதுவரை பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் அவ்வப்போது கார்பந்தய ஓடுதளத்தில் டிரைவிங் வீடியோக்களையும் பதிவேற்றி இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார். தற்போது விடாமுயற்சி படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துள்ள அஜீத். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பாக துபாயில் நடைபெறும் கார் ரேஸிங்கில் பங்கேற்க உள்ளதாக கார் ரேஸிங் வீரர் நரேன் கார்த்திகேயன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கான பயிற்சியில் தற்போது அஜீத் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அஜீத் புதியதாக அஜீத்குமார் ரேஸிங் என்ற புதிய கார் பந்தய அணி ஒன்றை உருவாக்கி அதன் உரிமையாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

விஜயகாந்துக்கான உண்மையான டிரிப்யூட் இதுதான்.. ஹரீஸ் கல்யாண் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க

இந்த அணியில் பெலிஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியூன் டஃபியு என்ற கார் பந்தய வீரர் அஜீக்குமார் ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ வீரராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பவில் அடுத்து நடைபெற உள்ள 24H போர்சே 992 GT3 வகைப் போட்யில் அஜீத்தின் அணி கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறமையான இளம் ஓட்டுநர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் பந்தயத் திட்டத்தை அவர்களுக்கு வழங்குவதே எங்களின் மிகப்பெரிய நோக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தற்போது நடிகர் விஜய் மக்கள் பணியில் இறங்கி விட்ட சூழ்நிலையில் அஜீத்தும் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு தனது லட்சியத்தை நோக்கி அடுத்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்கள் இருவருமே சினிமாவில் சாதித்து பின்னர் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒருவர் அரசியலிலும் மற்றொருவர் விளையாட்டிலும் வளரும் தலைமுறைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.