ஓவர் நைட்டில் ஓஹோ என ஹிட்டான அப்பாஸ் இருந்தும் மிஸ் ஆன மாஸ் இரண்டு ஹிட் படங்கள்

By John A

Published:

‘இதயம்’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அதுவரை எந்த இயக்குனரும் கையில் எடுக்காத காதல் கதையைச் சொல்லி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் கதிர். இளையராஜாவின் இசையும் முரளியின் அமைதியான நடிக்கும் இதயம் படத்தை மாபெரும் வெற்றியடைய செய்தது. இந்த ஹிட் பின் இயக்குனர் கதிர் அடுத்ததாக ‘உழவன் ‘ படத்தை இயக்கினார்.

பிரபு நடித்த இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. தனது முதல் படத்தில் இளையராஜாவுடன் கை கோர்த்த இயக்குனர் கதிர் உழவன் மகன் படத்தில் இருந்து ஏ ஆர் ரகுமான் உடன் கைகோர்த்தார். இவர் மூன்றாவதாக இயக்கிய திரைப்படம் தான் ‘காதல் தேசம்’ இந்த படத்திற்கு புதுமுக நடிகர் யாரையாவது நடிக்க வைக்கலாம் என எண்ணி வட மாநில வரமான அப்பாஸை இந்த படத்தின் இரண்டு நாய்கர்களில் ஒருவராக நடிக்க வைத்தார் இயக்குனர் கதிர்.

‘காதல் தேசம்’ படம் ஏ ஆர் ரகுமானின் இசைக்காகவே ஓடியது. முதல் இரண்டு நாட்கள் தியேட்டரில் கூட்டம் இல்லாத நிலையில் பாடல்கள் ரசிகர்களைகே கவர ஆரம்பித்தது. அதுவரை அரவிந்தசாமியின் ரசிகர்களாக இருந்த இளம் பெண்கள் அப்பாஸ் பக்கம் சாய்ந்தனர். இந்த நிலையில் இந்த பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அப்பாஸுக்கு மளமளவென படங்கள் புக் ஆனது.

சான்ஸ் கேட்ட கண்ணதாசனை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. பின்னாளில் அவர் படத்துக்கே சோபாவில் அமர்ந்து பாட்டெழுதிய கவிஞர்!

யாருமே எதிர்பாராத வகையில் ஒரே நேரத்தில் 18 படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தயாரிப்பாளர்களும் அப்பாஸின் கால் சீட்டுக்காக காத்திருந்தனர். காதல் தேசம் படத்திற்குப் பின்னர் அப்பாஸுக்கு அடுத்து வந்த இரண்டு படங்கள் சரியாக போகாததால் அட்வான்ஸ் கொடுத்த அத்தனை தயாரிப்பாளர்களும் பின்வாங்க ஆரம்பித்தனர்.

மேலும் அப்பாஸ் சரியான கதைக்கலங்களை தேர்ந்தெடுக்காததால் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால் அடுத்து வந்த படங்களில் இரண்டாவது நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அவர் உச்சத்தில் இருந்தபோது அவருக்காக வந்த படங்கள் தான் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜீன்ஸ்’ மற்றும் பாசில் இயக்கத்தில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’.

இந்த இரண்டு படங்களையும் அப்பாஸ் அப்போது பிஸியாக இருந்ததால் தவிர்த்து இருக்கிறார். எனினும் அவர் தொடர்ச்சியாக நடித்த படங்கள் எதுவும் ஓடாததால் திரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் இன்றி விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் இந்தியாவை விட்டு வெளியேறி நியூசிலாந்தின் ஒரு பெட்ரோல் பங்க் பணியாற்றி தற்போது வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ஒரு காலத்தில் ரசிகர்களின் அபிமான நட்சத்திரமாக இருந்த அப்பாஸ் சரியான பாதையை தேர்ந்தெடுக்காததால் மொத்தமாக சினிமாவை விட்டே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.