நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராய் விளங்கி வரும் சூழலில் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த அறிக்கை மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களின் திருமண உறவு மிக மிக சிறப்பாக இருந்த சூழலில் கடந்த ஆண்டு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றிலும் இவர்கள் இருவரும் தெரிவித்த பல காதல் தொடர்பான கருத்துக்கள் ரசிகர்கள் பலரையும் அதிகம் நெகிழ வைத்திருந்தது. சினிமாவில் ஒரு சிலர் தேவை இல்லாத காரணங்களால் பிரிந்து வரும் அதே வேளையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரின் உறவு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வந்தது.
அப்படி இருந்தும் ஜெயம் ரவி சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று அதிக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருமண உறவை விட்டு விலக போவதாகவும் சில வதந்திகள் வெளியானது. ஆனால் இதன் உண்மை என்ன என்பதை தெரியாமல் இருந்து வந்த நிலையில் தான் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதில் 15 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து அவர் விலகுவதாகவும் மற்ற சிலரின் நலனுக்காக தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறி தனது அறிக்கையின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். எப்போதும் போல ஜெயம் ரவியாக தன்னை ஒரு நடிகனுக்கு அனைவரும் ஆதரவை தர வேண்டும் என்றும் இந்த தனிப்பட்ட முடிவிற்கு மதிப்பு கொடுத்து யாரும் எதுவும் விவாதிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில் தான் தற்போது இது பற்றி ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தியும் தனது கணவர் வெளியிட்ட அறிக்கையில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தங்களின் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இது தனது கவனத்திற்கு வராமல் தனது ஒப்புதலும் இல்லாமல் கூட வெளியான ஒன்று என்பதையும் தெளிவுபடுத்தி உள்ள ஆர்த்தி ரவி, கடந்த 18 ஆண்டுகளாக தான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் காரணமாக அதன் கௌரவம் கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தனது கணவரை கடந்த பல நாட்களாக சந்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டும் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளது தான் தற்போது அதிகம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. என்ன நடக்கிறது என்பதை புரியாமல் தானும் தனது குழந்தைகளும் தவித்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஆர்த்தி ரவி, திருமண வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை தனது கணவர் ஜெயம் ரவி தனிப்பட்டு தனது விருப்பத்திற்காக மட்டுமே எடுத்துள்ளார் என்றும் குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் இல்லை என்றும் குறிப்பிட்ட ஆர்த்தி ரவி, இன்னும் பல கருத்துக்களையும் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தனது அறிக்கையில் கணவர் பெயரை சேர்த்து ஆர்த்தி ரவி என்றும் அவர் இடம்பெற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.