அஜித் நடித்த திருப்பதி என்ற படத்தில்தான் தானும் நடித்ததாகவும் அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது தான் அஜித்தை தான் முதல்முதலில் பார்த்ததாகவும் அது மட்டுமின்றி அஜீத்துடன் அவர் நடித்ததாகவும் நடிகை ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்
மேலும் விஜய்யை குருவி படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தான் முதலில் பார்த்து அவர் நடித்த யூத் என்ற படத்தில் இடம்பெற்ற ’சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம்’ என்ற பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று விஜய் ’தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை’ என்றும் கூறியுள்ளார்
அதேபோல் தான் மூன்று வயதாக இருக்கும் போது ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்ததாகவும் நடிகை ஆர்த்தி குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது