நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்துவரும் தென்னிந்திய நடிகையாகும். இவர் தமிழ் சினிமாவின் மூலமே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
இவர் 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலும் துணை நடிகையாக நடித்து இருப்பார்.
அதன்பின்னர் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்துவந்த இவர் தமிழில் மீண்டும் தமிழ் படம் 2, வீரா, நான் சிரித்தால் போன்ற படங்களின் பிரபலமானார்.
தற்போது ஊரடங்கினால் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் இவர், ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவில் உரையாடி வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “லாக்டவுன் முடிந்ததும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும், இதுபோன்று காற்று வாங்கி, வெளி உலகத்தை காண வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அம்மணி கொஞ்சம் கூடுதலாகவே அழகாகவே உள்ளார்.
ரசிகர்களும் இவரது பதிவுக்கு லைக் போட்டதுடன், ஆமாங்க நாங்களும் அதுக்குத்தான் வெயிட்டிங்க் என்று கூறியுள்ளனர்.