தெலுங்கில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது லவ் ரெட்டி திரைப்படம். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் பார்த்து ஆத்திரத்தில் படம் பார்க்க வந்த நடிகரை பெண் ஒருவர் கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தெலுங்கு சினிமா என்றாலே வில்லன்களை பறந்து பறந்து அடிக்கும் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும், கலர் கலராக டூயட் பாடுவதுவாக கமர்ஷியல் படங்களாக இருக்கும்.
சில வேளைகளில் நல்ல கதையம்சங்களுடன் கொண்ட படங்கள் வந்து சத்தமில்லாமல் வெற்றி பெறும். அந்த வகையில் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் லவ் ரெட்டி. இயக்குநர் சிம்ரன் ரெட்டி இயக்கத்தில் வனி சன்னன்ரார்யபதன் ஹீரோவாகவும், கிருஷ்ணவேணி ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் தான் லவ் ரெடி.
அழகோடு வந்த ஆபத்து.. AI- உருவாக்கிய பெண்மீது காதல்.. உயிரை மாய்த்த சிறுவன்..
கடந்த அக்டோபர் 19-ல் வெளியான இத்திரைப்படம் காதலை மையமாகக் கொண்ட கதையம்சத்தைக் கொண்டது. இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
இந்தத் திரைப்படம் கோலார் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. இப்படத்தினைப் புரோமோஷன்க்காக படக்குழுவினரும் வந்திருந்தனர். இதில் காதலர்களைப் பிரிக்கும் காட்சியில் ராமசாமி என்ற நடிகர் நடித்திருந்தார். இப்படம் முடிந்த போது அனைவரும் படக்குழுவினரைப் பாராட்டிச் சென்ற வேளையில் ஒரு பெண் மட்டும் காதலர்களைப் பிரித்த ஆத்திரம் தாங்க முடியாமல் நடிகர் ராமசாமியை திடீரெனத் தாக்கினார்.
இதனால் திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விசாரித்த போது காதலர்களை ராமசாமி பிரித்தது தனக்குப் பிடிக்கவில்லை எனவும், அந்தக் கதாபாத்திரத்தின் மீது கோபம் வந்ததால் அதில் நடித்த ராமசாமியை ஆத்திரம் தாங்காமல் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.