அட்லீ தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனாக பணிபுரிந்தார். 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.
முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் உடன் இணைந்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானார் அட்லீ.
2023 ஆம் ஆண்டு பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலித்து புகழின் உச்சிக்கு சென்றார் அட்லீ. அதை தொடர்ந்து மும்பையிலேயே செட்டிலான அட்லீ தமிழை தவிர மற்ற மொழி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் அடுத்ததாக அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை இயக்குவதற்காக அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 100 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். ஏனென்றால் ஏற்கனவே தெறி படத்தை ஹிந்தியில் பேபி ஜான் தான் என்ற பெயரில் ரீமேக் செய்து அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் இத்தனை சம்பளம் கேட்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் அட்லீ. இதைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த அப்சட்டில் இருக்கிறார்களாம். ஆனாலும் மிகக் குறைந்த படங்களே எடுத்துவிட்டு அட்லீ இவ்வளவு சம்பளம் கேட்பது கொஞ்சம் ஓவர்தான் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவி வருகிறது.