ரஜினி படம் ரிலீஸ் தினத்தில் விடுமுறை அளித்த பிரபல நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்து அந்த படத்திற்கான டிக்கெட்டையும் வழங்கி வருவதை கடந்த காலங்களில் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் அந்தவகையில் ஜனவரி…


e0711db752fc5d3d972f971174cb1f1e-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்து அந்த படத்திற்கான டிக்கெட்டையும் வழங்கி வருவதை கடந்த காலங்களில் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்

அந்தவகையில் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஒரு தனியார் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதோடு ‘தர்பார்’ படத்தின் டிக்கெட்டையும் பொங்கல் பரிசாக வழங்கி உள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ‘தர்பார்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இன்னும் ஒரு சில தனியார் நிறுவனங்களும் அன்றைய தேதியில் தேதியில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது

61e88195f525b48d5f8f2b95f8bec931

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன