சூர்யா 45 இல் இணையும் முன்னணி நடிகர்… யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

By Meena

Published:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. வரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் கார்த்திக் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது.

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூர்யா தொடர்ந்து ந்தா மௌனம் பேசியதே பிதாமகன் காக்க காக்க வாரணம் ஆயிரம் சிங்கம் படத்தொடர் போன்ற பல கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார்.

vjs

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூரியன் 45 வது படம் தொடங்கி கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூட்டிங் நடந்து வருகிறது. இதில் சூர்யா நடித்து வருகிறார்.

இந்த சூர்யா 45 திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நான் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் வேறு எந்த படத்திலும் கேமியோ ரோலிலும் வில்லன் ரோலிலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நிலையில் தற்போது சூர்யா 45 பட குழு விஜய் சேதுபதியை சந்தித்து கதையை கூறியிருக்கிறார்களாம். அவரும் நடிக்க ஒத்துக் கொண்டது போல் தான் தெரிகிறது விரைவில் சூர்யா 45 படபிடிப்பில் இணைவார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.